ANTARABANGSA

துருக்கி பத்திரிகையாளர் மலேசியாவில் கைது

26 செப்டெம்பர் 2017, 5:32 AM
துருக்கி பத்திரிகையாளர் மலேசியாவில் கைது

கோலாலம்பூர், செப்டம்பர் 25:

துருக்கி பத்திரிகையாளர் முஸ்தபா ஆக்யோல் நேற்று திங்கட்கிழமை மாலை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப் பட்டார்.

கோலாலம்பூரில் நடைபெறவிருந்த இஸ்லாம் மாநாடுகளில் பேசுவதற்காக ஐ.ஆ.ர்எஃப். (Islamic Renaissance Front) என்ற அமைப்பால் ஆக்யோல் மலேசியாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், ஆக்யோலுக்கு ஜாவி அமைப்பு (Federal Territories Islamic Religious Department) அறிக்கை அனுப்பியதாகவும், பின்னர் விமான நிலையத்தில் உள்ள குடிநுழைவு இலாகா அதிகாரிகளால் ஆக்யோல் கைது செய்யப் பட்டதாகவும் ஐ.ஆர்.எஃப். கூறியிருக்கிறது.

நேற்று மாலை நோட்டிங்கம் பல்கலைக்கழகத்தில், “இஸ்லாமிய ஜீசஸ்: யூதம், கிறித்துவம் மற்றும் இஸ்லாமியம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள பொதுவான விசயங்கள்” என்று தலைப்பில் ஆக்யோல் பேசவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(நன்றி: செல்லியல்)

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.