ANTARABANGSA

1எம்டிபி: அமெரிக்க நீதிமன்றம், நீதித்துறையின் வேண்டுகோளுக்கு இணங்கி தள்ளி வைத்தது

14 செப்டெம்பர் 2017, 5:32 AM
1எம்டிபி: அமெரிக்க நீதிமன்றம், நீதித்துறையின் வேண்டுகோளுக்கு இணங்கி தள்ளி வைத்தது

ஷா ஆலம், செப்டம்பர் 14:

அமெரிக்க நீதிமன்றம் ஒன்று, நீதித்துறையின் வேண்டுகோளுக்கு இணங்கி 1எம்டிபி ஊழல் சம்பந்தப்பட்ட சொத்துடமைகளை பறிமுதல் செய்ய உத்தேசித்த சிவில் வழக்கை ஒத்தி வைத்தது. மலேசியாகினியின் செய்தியின் அடிப்படையில், கடந்த மாதம் நீதித்துறை இந்த விண்ணப்பத்தை செய்த நிலையில், புதிதாக மேற்கொண்ட குற்றவியல் விசாரணையை பாதிக்காத வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறியது.

மேற்கண்ட நீதிமன்றம், நீதித்துறையின் ஆவணங்கள் வெளியாகி விடும் என்றும் சாட்சிகள் மற்றும் விவரங்கள் அளிக்க வருபவர்கள் மீது எந்த ஒரு விபரீதமான சம்பவங்கள் நடக்காமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார். மேலும், தற்போதைய சூழ்நிலையில் ஆதாரங்கள் அளித்து விடும் சாத்தியம் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்: மலேசியாகினி

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.