RENCANA PILIHAN

புதிய தேசிய காவல்துறை தலைவருக்கு மந்திரி பெசார் வாழ்த்துக்கள் கூறினார்

4 செப்டெம்பர் 2017, 4:45 AM
புதிய தேசிய காவல்துறை தலைவருக்கு மந்திரி பெசார் வாழ்த்துக்கள் கூறினார்

ஷா ஆலம், செப்டம்பர் 4:

புதிதாக 11-வது தேசிய காவல்துறை தலைவராக பதவி ஏற்ற டத்தோ ஸ்ரீ முகமட் பூஸி ஹாரூனுக்கு சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

தனது அதிகாரப்பூர்வ டிவிட்டரில், அஸ்மின் அலி இந்த நியமனம் காவல்துறையின் செயல்பாட்டை மேலும் வலுப்படுத்தும் என்றார்.

"  11-வது தேசிய காவல்துறை தலைவராக பதவி ஏற்ற டத்தோ ஸ்ரீ முகமட் பூஸி ஹாரூனுக்கு எனது வாழ்த்துக்கள். காவல்துறையின் செயல்பாடுகள் மேலும் திறன் கொண்டதாக இருக்கும் என்று நம்புகிறேன்," என்று டிவிட்டரில் பதிவு செய்தார்.

கடந்த 2014-இல் துணை காவல்துறை தலைவர் பதவியில் இருந்த டான்ஸ்ரீ முகமட் பக்ரி ஜீனீன் கட்டாய ஓய்வு பெற்ற போது அவரின் பணியை செவ்வனே செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.