RENCANA PILIHAN

மந்திரி பெசார் அம்பாங் மக்களோடு இணைந்து எம்பிஏஜே பெருவிழாவை எழுச்சியூட்டினார்

20 ஆகஸ்ட் 2017, 3:54 AM
மந்திரி பெசார் அம்பாங் மக்களோடு இணைந்து எம்பிஏஜே பெருவிழாவை எழுச்சியூட்டினார்

அம்பாங், ஆகஸ்ட் 20:

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஏஜே) ஏற்பாடு செய்த பெருவிழா நிகழ்ச்சியில் களம் இறங்கி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

அம்பாங் நகராண்மை கழகத் திடலில் இரண்டு நாட்களாக நடைபெறும் பெருவிழாவில் பல்வேறு சமுதாய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்ட வேளையில் வட்டாரத்தில் வாழுகின்ற பொது மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த பெருவிழாவின் உச்சக் கட்ட அங்கமாக, அஸ்மின் அலி, ஆட்சிக் குழு உறுப்பினர்களான டத்தோ இஸ்கண்டர் அப்துல் சமத், அமிரூடின் ஷாரி, டாக்டர் டரோயா அல்வி மற்றும் 2000 பொது மக்களோடு தேசிய கொடியை பறக்க விடுவோம், 12 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டம் மற்றும் 10,000 அடிகள் நடப்பது போன்ற உடல் ஆரோக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும் மந்திரி பெசாரோடு அம்பாங் ஜெயா நகராண்மை கழகத்தின் தலைவர் அப்துல் ஹமீத் ஹூசேன், உலு கிள்ளான் சட்ட மன்ற உறுப்பினர் ஷாரி சுங்கிப், லெம்பா ஜெயா சட்ட மன்ற உறுப்பினர் காஸிம் அப்துல் அஸிஸ் மற்றும் அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர் ஏசிபி ஹாம்ஸா அலியாஸ் உடன் கலந்து கொண்டனர்.

"   நானும் எனது ஆட்சிக் குழு உறுப்பினர்களும், இன்று மக்களோடு சைக்கிள் ஓட்டுவது மற்றும் 10,000 அடிகள் நடப்பது போன்ற உடல் ஆரோக்கியம் பெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் எனக்கு மகிழ்ச்சி என்னவென்றால், நான் எம்பிஏஜே தலைவர் மற்றும் ஆட்சிக் குழு உறுப்பினர்களை விட சுறுசுறுப்பாக இருக்கிறேன்," என்று மக்களின் பலத்த கரவொலியிடையே கூறினார்.

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.