RENCANA PILIHAN

தெங்கு அட்னான் 'சிலாங்கூர் பைத்தியக்காரர்கள்' என்ற அறிக்கை, சமூக வலை தளங்களில் பதிலடி

14 ஆகஸ்ட் 2017, 9:04 AM
தெங்கு அட்னான் 'சிலாங்கூர் பைத்தியக்காரர்கள்' என்ற அறிக்கை, சமூக வலை தளங்களில் பதிலடி
தெங்கு அட்னான் 'சிலாங்கூர் பைத்தியக்காரர்கள்' என்ற அறிக்கை, சமூக வலை தளங்களில் பதிலடி
தெங்கு அட்னான் 'சிலாங்கூர் பைத்தியக்காரர்கள்' என்ற அறிக்கை, சமூக வலை தளங்களில் பதிலடி

ஷா ஆலம், ஆகஸ்ட் 14:

சிலாங்கூர் தகவல் ஊடகங்கத்தின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் அம்னோவின் பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சூருக்கு கனவு காணாமல் நிஜத்தை ஏற்றுக் கொள்ள கற்றுக் கொள்ளுமாறு சமூக வலைதள பயனீட்டாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

தெங்கு அட்னான் சிலாங்கூர் மக்கள் பாக்காத்தானை மாநில அரசாங்கத்தை வழி நடத்த தேர்ந்தெடுக்கப் பட்டது 'பைத்தியக்காரத்தனமான செயல்' என்ற அறிக்கையின் மீது கடும் ஆத்திரம் அடைந்த நிலையில் பல்வேறு கருத்துக்களை அகப்பக்கத்தில் பதிவு செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, அகப்பக்கத்தில் சிலாங்கூர் மக்கள் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் தலைமையின் கீழ் நல்ல நிலையிலும் மற்றும் சிறந்த மேம்பாட்டு அடைவுநிலையை அடைந்ததாக கருத்து தெரிவித்து உள்ளனர்.

"   சிலாங்கூர் மக்களாகிய நாங்கள் பாக்காத்தான் ஆட்சியில் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு வருகிறோம். அரசியல் வேறுபாடுகள் இல்லாமல், அனைவரும் எல்லா திட்டங்களின் மூலம் பயன் பெறுகிறார்கள். அம்னோ பிஎன் அரசாங்கம் போல் பிரீம் உதவி கொடுக்கும் போது கூட ஆள் பார்த்துக் கொடுக்கும் கலாச்சாரம் சிலாங்கூர் அரசாங்கத்திற்கு இல்லை. அம்னோ தேசிய முன்னணி அரசாங்கத்தின் கீழ் விலைகள் உயர்ந்து கொண்டே போகிறது. ஆகவே சிலாங்கூர் மக்களை சீண்டிப் பார்க்கும் செயலை நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்," என்று ஒருவர் கூறியிருக்கிறார்.

Ku Nan

 

 

 

 

 

இதற்கு முன்பு, தெங்கு அட்னான் பெட்டாலிங் ஜெயா உத்தாரா அம்னோ தொகுதியின் ஆண்டுக் கூட்டத்தை திறந்து வைத்து பேசுகையில் சிலாங்கூர் மாநில மக்கள் பாக்காத்தானை மாநில அரசாங்கமாக தேர்ந்தெடுத்ததிற்கு 'பைத்தியக்காரத்தனம்' என்று கூறியிருந்தார். இப்போது இருக்கும் மாநிலத்தின் கையிருப்பு தேசிய முன்னணி அரசாங்கம் நிறைவேற்றிய முன்னேற்றத்தை அடிப்படையில் வந்ததாகும் என்று தமது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

சிலாங்கூர் மாநிலத்தின் வளம் நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகம் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 2008-இல் இருந்து ரிம 400 மில்லியனாக இருந்த மாநிலத்தின் கையிருப்பு இன்று ரிம 4 பில்லியனை தொட்டுள்ளது தேசிய முன்னணி அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு அல்ல. ஊழலற்ற நிர்வாகம் ஒன்றே பலமான கையிருப்பு கொண்டு இயங்கும் சிலாங்கூர் மாநிலத்தை மேம்படுத்த முடியும்.

"  போதும் உங்களின் வரம்பு மீறிய வார்த்தை. பில்லியன் கணக்கில் கையிருப்பு உள்ளது தற்போதைய பாக்காத்தான் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு. அப்படி தேசிய முன்னணி அரசாங்கம் ஆட்சி செய்து இருந்தால் தற்போது ரிம 146 மில்லியன் கடனில் இருந்திருக்கும். எனக்கு உங்களை பற்றி பேச சோம்பலாக உள்ளது. இறுதியாக கூறுகிறேன். ஒழிந்து போங்கள்," என்று மற்றொரு நெட்டிஸன்.

கையிருப்பு மட்டுமில்லாமல், சிலாங்கூர் மாநில அரசாங்கம் பல்வேறு மக்கள் நல திட்டங்களை மற்றும் மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வருவதை கண்கூடாக பார்க்கிறோம் என்று நெட்டிஸன் கருத்து தெரிவித்துள்ளனர்.

"   இவரை போன்றவர்கள் சிலாங்கூரில் என்ன இருக்கும் என்று தெரியாது. குறை சொல்லியே அரசியல் தேடி வருபவர்கள்," என்று #சாகும்வரைசிலாங்கூர் என்ற நெட்டிஸன் கூறினார்.

10.05 Pelancaran Karnival Inisiatif Peduli Rakyat KD (REMY)

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.