SUKANKINI

கார்துங்: பிகேஎன்எஸ் எப்ஃசி தோல்வி அடைந்தாலும் பெல்டா யுனைடெட்டுக்கு சவாலாகவே இருந்தது

2 ஆகஸ்ட் 2017, 1:41 AM
கார்துங்: பிகேஎன்எஸ் எப்ஃசி தோல்வி அடைந்தாலும் பெல்டா யுனைடெட்டுக்கு சவாலாகவே இருந்தது

பண்டார் ஜெங்கா, ஆகஸ்ட் 2:

பிகேஎன்எஸ் அணி சிறந்த முறையில் ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு பெல்டா யுனைடெட்டுக்கு கடுமையான போட்டியை கொடுத்தது என செவன் கார்துங் கூறினார். இருந்தாலும் குறுகிய கோல் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாலும் விளையாட்டு திறனில் நிம்மதி அடைவதாக தெரிவித்தார்.

 

நேற்று இரவு துன் அப்துல் ரசாக் அரங்கில் நடைபெற்ற மலேசிய கிண்ணத்தில் குழு நிலையில் ஆடிய ஆட்டத்தில் பெல்டா யுனைடெட் 3-2 என்ற கோல் கணக்கில் பிகேஎன்எஸ் எப்ஃசியை தோற்கடித்து கால் இறுதி ஆட்டத்திற்கு தேர்வாகியது.

"   உபசரணை குழுவான பெல்டா யுனைடெட்டுக்கு 75-வது நிமிடம் வரையில் கடுமையான போட்டியை கொடுத்து திக்குமுக்காடி செய்தது. ஆனாலும் சில ஆட்டக்காரர்களை மாற்றம் செய்ததால் நிலைமை அதன் பிறகு மாறியது. 19 மற்றும் 21 வயதுக்கு கீழ் உள்ள விளையாட்டாளர்களை களம் இறக்கியதால் ஆட்டம் பிகேஎன்எஸ் எப்ஃசியின் விளையாட்டு மாறத் தொடங்கியது," பயிற்சியாளர் கார்துங் செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்.

#கேஜிஎஸ்

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.