RENCANA PILIHAN

சிலாங்கூரின் நிதி நிர்வாகம் மிகச்சிறந்த அடைவுநிலையை நிலை நிறுத்தியது

1 ஆகஸ்ட் 2017, 9:43 AM
சிலாங்கூரின் நிதி நிர்வாகம் மிகச்சிறந்த அடைவுநிலையை நிலை நிறுத்தியது
சிலாங்கூரின் நிதி நிர்வாகம் மிகச்சிறந்த அடைவுநிலையை நிலை நிறுத்தியது
சிலாங்கூரின் நிதி நிர்வாகம் மிகச்சிறந்த அடைவுநிலையை நிலை நிறுத்தியது

ஷா ஆலம், ஆகஸ்ட் 1:

தேசிய தணிக்கை இலாகா சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் கீழ் செயல்படும் 16 இலாகாகள் மற்றும் அரசு சார்புடைய நிறுவனங்களின் நிதி நிர்வாகம் சிறப்பான முறையில் இருப்பதாக தெரிவித்தது. அதில் ஏழு இலாகாகள் மிகவும் சிறந்த அடைவை எட்டி உள்ளதாக கூறியுள்ளது.

தேசிய தணிக்கை இலாகாவின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் மடினா முகமட் கூறுகையில், மேலும் ஏழு இலாகாகள் மற்றும் நிறுவனங்கள் சிறந்த நிலையில் இருப்பதாக கூறினார். இதையடுத்து மேலும் இரண்டு நிறுவனங்கள் மனநிறைவு அளிக்கும் வகையில் இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டினார்.

”   மாநில இலாகா அல்லது நிறுவனங்கள் தங்களின் நிதி நிர்வாகத்தை மேம்படுத்த வேண்டும் என்றால் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதில் குறிப்பாக நிதி நிர்வாக அதிகாரிகளுக்கு திறன்களை மேம்படுத்த பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்,” என்று தெரிவித்தார்.

ekonomi-selangor-1

 

 

 

 

 

தேசிய தணிக்கை இலாகாவின் 2016-இன் அறிக்கை அடிப்படையில், சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் கஜானா 96.88% வசூலை எட்டியது. இதையடுத்து மாநில அரசாங்கத்தின் செயலாளர் அலுவலகம் 96.2%, செப்பாங் நகராண்மை கழகம் 96.12% மற்றும் உலு லங்காட் நில மற்றும் மாவட்ட அலுவலகம் 94.86% வசூல் செய்ததாக பதிவு செய்துள்ளது.

இதனிடையே வனத்துறை இலாகா 94.26%, பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் 91.25% மற்றும் பொதுச் சேவை ஆணையம் 90.85% பதிவு செய்ததாக அறிக்கை கூறுகிறது.

AUDIT2

 

 

 

 

 

 

 

 

மேலும் ஏழு இலாகாகள் சிறந்த அடைவுநிலையை கொண்டதாக உள்ளது, அதில் பொதுப்பணித்துறை 89.12% பெற்று முதல் நிலையில் இருப்பதாக கூறுகிறது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மேலும் இரண்டு நிறுவனங்கள் அதிகரித்து சிறந்த சேவையை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.