RENCANA PILIHAN

சிலாங்கூர் பரிவுமிக்க அரசாங்கம், மற்ற மாநில மக்களின் மீதும் அக்கறை காட்டுகிறது

22 ஜூலை 2017, 7:36 AM
சிலாங்கூர் பரிவுமிக்க அரசாங்கம், மற்ற மாநில மக்களின் மீதும் அக்கறை காட்டுகிறது

குவாந்தான், ஜூலை 22:

சிலாங்கூர் மாநில அரசாங்கம் பரிவுமிக்க மக்கள் நல திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டு வருகிறது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். அது மட்டுமில்லாமல் சிலாங்கூர் மாநில அரசாங்கம் மற்ற மாநில மக்களின் மீதும் அக்கறை கொண்டு பல உதவிகள் செய்து வருகிறது என்றால் மிகையாகாது.

"  பரிவுமிக்க ஒரு அரசாங்கமாக இருந்துக் கொண்டு, சிலாங்கூர் மாநில மக்களை மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் சிலாங்கூர் மாநிலத்தை மேம்படுத்த மற்ற மாநிலங்களில் இருந்து வந்த மக்களையும் அவர்களின் அர்ப்பணிப்பையும் மறந்து விட வேண்டாம். சிலாங்கூர் மாநில வளம் மற்றும் செல்வங்களையும் திறன் மிக்க மற்றும் பொறுப்புடன் நிர்வகிக்க வேண்டும்," என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

அஸ்மின் அலி நேற்று பேராக் தொடங்கி இன்று பகாங் மாநிலத்தில் தனது நோன்பு பெருநாள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட போது அவர் இதனைக் கூறினார். சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் நடவடிக்கையை முன்மாதிரியாகக் கொண்டு மற்ற மாநிலங்களும் செயல்பட வேண்டும் என்றார். தனது வருகையை இந்த இரண்டு மாநில மக்கள் திரளாக கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துக் கொண்டதை கண்டு பெருமிதம் கொண்டதாக கூட.

பொது மக்களின் ஆதரவு பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி அடுத்து வரும் 14-வது பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு உந்துகோலாக இருக்கும் என்று தெரிவித்தார். இந்த பயணத்தின் போது அஸ்மின் அலி பல்வேறு உதவிகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.