RENCANA PILIHAN

பொது மக்கள் மாநில அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை கண்டு பூரிப்பு

7 ஜூலை 2017, 6:13 AM
பொது மக்கள் மாநில அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை கண்டு பூரிப்பு
பொது மக்கள் மாநில அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை கண்டு பூரிப்பு

ரவாங், ஜூலை 7:

கண்டிரி ஹோம்ஸ் நகர பொது மக்கள் 20 ஆண்டுகளுக்கு பிறகு காவல் நிலையம் கட்டப்பட்டதைக் கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டனர். காவல் நிலையம் கட்டப்பட விண்ணப்பத்தை 1998-இல் இந்த நகரம் முழுமையாக நிர்மாணிக்கப்பட்ட பிறகு   செய்யப்பபட்டதாக கூறப்படுகிறது. பல மகஜர்களை பொது மக்களின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அரசு இலாகாவிற்கு அனுப்பப் பட்டதாக இப்பகுதியின் குடியிருப்பாளரும், முன்னாள் செலாயாங் நகராண்மை கழக உறுப்பினருமான குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.

கண்டிரி ஹோம்ஸ் நகர காவல் நிலைய மேம்பாட்டு திட்டம் நான்கு காவல்துறை அதிகாரிகளை கொண்டு செயல்படும் தற்காலிக காவல் நிலையத்திற்கு பதிலாக கட்டப்பட்டது.

IMG_4889

 

 

 

 

 

 

இந்த தற்காலிக காவல் நிலையம் 40,000 பேர் கொண்ட குடியிருப்பு பகுதியான கண்டிரி ஹோம்ஸ் நகர மக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது என்று ரவாங் சட்ட மன்ற உறுப்பினர் கான் பெய் நீ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிதாக உருவாக்கப்பட்ட காவல் நிலையம் 80 காவல்துறை அதிகாரிகள் கொண்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த செயல்படும் என்றும் கான் கூறினார்.

இதற்கு முன்பு, கான் பெய் நீ, செலாயாங் நகராண்மை கழக உறுப்பினர் துரை மற்றும் மேம்பாட்டு குத்தகை நிறுவனமான ஜூத்தாபீனா செம்பூர்னாவின் நிர்வாக இயக்குனர் சகிமான் முகமட் யூசோப் ஆகியோர் புதிய காவல் நிலையத்தை பார்வையிட்டனர்.

தற்போது 90% கட்டிட வேலைகள் முடிந்துவிட்டது என்றும் மீதமுள்ள 10% முடியும் தருவாயில் உள்ளது என்று சகிமான் கூறினார்.

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.