RENCANA PILIHAN

சிலாங்கூரை மேம்படுத்த பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன

3 ஜூலை 2017, 8:29 AM
சிலாங்கூரை மேம்படுத்த பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன
சிலாங்கூரை மேம்படுத்த பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன

ஷா ஆலம், ஜூலை 3:

மந்திரி பெசார் பெறுநிறுவனம்  (எம்பிஐ) உள்ளூர் பல்கலைக் கழக மாணவர்களுக்கு சிலாங்கூர் மாநிலத்தை மேம்படுத்த தங்களின் பரிந்துரைகளை அளிக்கும் வகையில் 'இன்ஸ்தெர்ஷிப் எம்பிஐ' 2017 திட்டத்தை தொடங்கி உள்ளது.

எம்பிஐயின் தலைமை செயல் அதிகாரி சோபான் அப்ஃபெண்டி அமீனுடின் கூறுகையில், இந்த முயற்சி எம்பிஐ மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மூலம் செயல் படுத்தப் படும் என்றார்.

"   எம்பிஐ, 30 கணக்கியல், தகவல் தொழில்நுட்பம், சட்டம் மற்றும் தொழில் நுட்பம் போன்ற துறைகளைச் சேர்ந்த மாணவர்களை இலக்காக வைத்து உள்ளது. தேர்ந்தெடுக்கப் பட்ட மாணவர்கள் தங்களின் ஆலோசனை, சக்தி மற்றும் முயற்சிகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்யப் பட்ட திட்டங்கள் வாயிலாக செயல் படுத்தலாம். செயல்படுத்தப் படும் திட்டங்கள் மாநில வளர்ச்சிக்கும், சமூக பொருளாதார மேம்பாட்டுக்கும் உந்துதல் அளிக்கும்," என்று தெரிவித்தார்.

image2

 

 

 

 

 

 

இதனிடையே, எம்பிஐ உலக பெரிய நிறுவனங்கள் பயன்படுத்தும் நடைமுறையை பின்பற்றி இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் அடிப்படையில், மாணவர்கள் தங்களின் தலைமைத்துவம் மற்றும் திறன்களை வெளிப்படுத்தவும் வேலைகளில் ஏற்படும் சூழ்நிலை மற்றும் வேலையிட நடைமுறை போன்ற அம்சங்கள் உலக தரத்திலான முறையில் அமல்படுத்தப் படும் என்று கூறினார்.

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.