RENCANA PILIHAN

உலு லங்காட் வெள்ளம்: மாநில அரசாங்கம் & எம்பிஐ உடனடி உதவி நல்கியது

18 ஜூன் 2017, 6:58 AM
உலு லங்காட் வெள்ளம்: மாநில அரசாங்கம் & எம்பிஐ உடனடி உதவி நல்கியது
உலு லங்காட் வெள்ளம்: மாநில அரசாங்கம் & எம்பிஐ உடனடி உதவி நல்கியது
உலு லங்காட் வெள்ளம்: மாநில அரசாங்கம் & எம்பிஐ உடனடி உதவி நல்கியது
உலு லங்காட் வெள்ளம்: மாநில அரசாங்கம் & எம்பிஐ உடனடி உதவி நல்கியது
உலு லங்காட் வெள்ளம்: மாநில அரசாங்கம் & எம்பிஐ உடனடி உதவி நல்கியது

உலு லங்காட், ஜூன் 18:

மாநில அரசாங்கம் சமூக நல ஆட்சிக் குழு மற்றும் சிலாங்கூர் மந்திரி பெசார் குழுமத்தின் வாயிலாக களம் இறங்கி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பத்து 10, கொம்லெக்ஸ் பெங்ஹூளு நிவாரண மையத்தில் இன்று மாலை சந்தித்தது என்று மாநில சுகாதாரம், சமூக நலம், மகளிர் மற்றும் குடும்ப நலன் ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் டரோயா அல்வி கூறினார். உலு லங்காட் மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்ட செய்தி வந்த உடனே மாநில அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்ய களம் இறங்க முடிவு செய்தது.

"   இன்று நாம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் வீட்டை சுத்தம் செய்யும் கருவிகள் சமூக நல இலாகா மூலம் கொடுத்து இருக்கிறோம். இதையடுத்து நிவாரண உதவி நிதி வழங்குவோம். இந்த திடீர் வருகை பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைக்கு ஏற்ப நிவாரண உதவி நிதி வழங்க ஏதுவாக இருக்கும்," என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

Banjir1

 

 

 

 

 

 

டாக்டர் டரோயா அல்வி மேலும் கூறுகையில், பண உதவி எதிர் வரும் புதன்கிழமை எம்பிஐ சிலாங்கூர், ஸாகாட் சிலாங்கூர் வாரியம், டாரூல் ஏசான் கல்லூரி வாரியம் மற்றும் சில அரசு சார்பற்ற இயக்கங்களின் ஒத்துழைப்போடு வழங்கப்படும் என்றார்.

"   சிலாங்கூர் மாநில மேம்பாட்டு நிறுவனத்தையும் (பிகேஎன்எஸ்) உதவி நிதி வழங்குமாறு தாம் கேட்டுக் கொண்டேன். இதுவரை 111 பாதிக்கப்பட்ட மக்கள் இருப்பதாகவும், ஆனால் இன்னும் சிலர் பட்டியல் இடப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம். சிலர் இரண்டு மாடி வீடுகளில் குடியிருப்பதால் நிவாரண மையத்தில் சேர்க்கப் படவில்லை. இருந்தாலும் நான் கிராமத்து தலைவர்களை அனைத்து பாதிக்கப்பட்ட மக்களையும் நிவாரண உதவி நிதி பட்டியலில் சேர்க்கும்படி கட்டளை இடப்பட்டுள்ளது," என்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். அவரோடு எம்பிஐ சமூக நல மற்றும் தொழில்முறை பிரிவு தலைவர் முகமட் ஜாஃபாரூடின் முகமட் அலியும் நிவாரண மையத்திற்கு வருகை தந்தார்.

 

#கேஜிஎஸ்

Banjir 2

 

Banjir 3

 

19145761_1997791323579572_1126934405281686462_n

=EZY=

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.