PENDIDIKAN

முதலில் வற்புறுத்தி யுனிசெல்-இல் சேர்க்கப்பட்டேன், இறுதியில்...

16 மே 2017, 6:25 AM
முதலில் வற்புறுத்தி யுனிசெல்-இல் சேர்க்கப்பட்டேன், இறுதியில்...
முதலில் வற்புறுத்தி யுனிசெல்-இல் சேர்க்கப்பட்டேன், இறுதியில்...

ஷா ஆலம், மே 16:

நோர் ஷாயிரா அமீரா இஸ்மாயில் முதலில் தனது தாயாரின் வற்புறுத்தலின் பேரில் இன்ஸ்பென்ஸ் அனைத்துலக கல்லூரியில் டிப்ளோமா கல்வியை தொடங்கியதாக கூறினார்.  ஆரம்ப காலத்தில் இன்ஸ்பென்ஸ்-இல் கல்வித்தரம் மற்ற உள்நாட்டு உயர்கல்வி நிலையங்கள் போல் இருக்காது என்று நிறைந்ததாக கூறினார். ஆனால், முதல் தவணை தேர்வை முடித்தவுடன் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் கல்லூரியான இன்ஸ்பென்ஸ் தொழிலாளர் சந்தையில் எதிர் நோக்கக் கூடிய அனைத்து சவால்களையும் சமாளிக்கும் திறன் கொண்ட மாணவர்களை உருவாக்கி இருக்கிறது என்று தெரிகிறது என்றார்.

"   ஆரம்பத்தில் எனக்கு தொழில் திறன் பயிற்சியில் நாட்டம் இல்லை, அதுவும் தையல் பயிற்சி எனக்கு பிடிக்காத ஒன்று. பெரும்பாலும் தொழில் திறன் பயிற்சிகளை மிகவும் கேவலமாக பார்ப்பார்கள். நானும் வற்புறுத்தலின் பேரில் படித்தேன். ஆனால் தொழில் திறன் பயிற்சிகள் தான் அதிகமான வருமானத்தை ஈட்டித்தரும்," என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

INPENS2

 

 

 

 

 

நோர் ஷாயிரா சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் செயலாளரின் சிறப்பு விருதை, சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் தலைமையகத்தில் அமைந்துள்ள ஜூப்ளி பேராக் மண்டபத்தில்  இன்ஸ்பென்ஸ் கல்லூரியின் 21-வது பட்டமளிப்பு விழா 2017-இல் பெற்றார். அவர் இன்ஸ்பென்ஸ் கல்லூரியில் டிப்ளோமா கல்வியை தொடரும் போது சிலாங்கூர் மாநில மேம்பாட்டு கழகம்  (பிகேஎன்எஸ்) நடத்திய தொழில் முனைவர் கண்காட்சியில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, அக்மால் ஜைனுல் அரீப்பீன் முகமட் ரஷிடி மாநில கல்விக் குழு ஆட்சிக் குழு உறுப்பினரின் சிறப்பு விருதை தட்டிச் சென்றார். இவர் மின்னணு மற்றும் மேகாடுரோனிக் துறையில் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.