RENCANA PILIHAN

கெஅடிலான் சிலாங்கூரை தைவானிடம் அடகு வைக்கிறது என்ற கூற்றை மறுக்கிறது

27 ஏப்ரல் 2017, 10:01 AM
கெஅடிலான் சிலாங்கூரை தைவானிடம் அடகு வைக்கிறது  என்ற கூற்றை மறுக்கிறது
கெஅடிலான் சிலாங்கூரை தைவானிடம் அடகு வைக்கிறது  என்ற கூற்றை மறுக்கிறது

ஷா ஆலம், 27 ஏப்ரல்;

சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கும் தைவான் நாட்டிற்கும் இடையிலான நல்ல உறவு மாநிலத்தை பாக்காத்தான் விற்கிறது என்று அர்த்தம் இல்லை.

கெஅடிலானின் உதவித் தலைவர் தியான் சுவா அம்னோ  ஆதரவு  இணையதளத்தில் வெளியிட்ட டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தலைமையில் தைவானுக்கு சென்ற குழு மாநில அரசாங்கம் தைவானின் கைப்பாவையாக இருக்கும் என்று செய்தியை மறுத்தார்.

" இந்த பயணம்  உண்மையில் தைவானின் அனுபவத்தை பல்வேறு துறைகளில் குறிப்பாக செம்மையான போக்குவரத்து சேவையை நாம் புரிந்து கொண்டு  இங்கு பயன்படுத்தி கொள்ளலாம். "என்று உறுதியாக கூறினார்

tian-chua-pc-pkr-01

 

 

 

 

 

 

" மந்திரி பெசார் மிகவும் ஆர்வமாக எல்லா விஷயங்களிலும் கற்றுக் கொண்டு சிலாங்கூர் மாநில நிர்வாகத்தில் பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்", என்றார் தியான் சுவா.

அவரோடு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களான தெங் சாங் கிம், அமிருடின் ஷாரி, டத்தோ டாக்டர் அமாட் யூனுஸ் ஹய்ரி, மாநில துணை செயலாளர் டத்தோ நோர்  அஸ்மி டிரோன், இன்வெஸ்ட் சிலாங்கூரின் தலைமை செயல் அதிகாரி டத்தோ ஹாசான், சிட்தேக் தலைமை செயல் அதிகாரி வோங் கை பெங், சென்றல் ஸ்பெக்டரமின் தலைமை செயல் அதிகாரி மாமுட் அபாஸ், ஹாலால் மற்றும்  இ-வணிகத்தை சேர்ந்த தொழில் முனைவர்களும் கலந்து கொண்டனர்.

இதற்கு முன்பாக டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தைவான் உடனான உறவு சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.