SELANGOR

கம்போங் துங்கு சட்டமன்ற தொகுதியில் இலவச பெட்ரோல்

9 ஏப்ரல் 2017, 4:58 AM
கம்போங் துங்கு சட்டமன்ற தொகுதியில் இலவச பெட்ரோல்

ஷா ஆலம் - கம்போங் துங்கு வாழ் மக்களுக்கு இலவச பெட்ரோல் சேவையினை வழங்குவதற்காக அதன் சட்டமன்ற உறுப்பினர் லாவ் வேங் சான் வெ.500ஐ ஒதுக்கினார்.இஃது நிலையற்ற பெட்ரோல் விலையால் அவதியுறும் மக்களுக்கு பெரும் உதவியாக விளங்கிடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

நிலையற்ற பெட்ரோல் விலையால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் அதனை அவர்கள் ஓராளவு சமாளிக்கவே இம்மாதிரியான திட்டத்தை முன்னெடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இலவச பெட்ரோல் சேவையால் சுமார் 110 மோட்டார் சைகிள் ஓட்டிகள் நன்மை அடைந்ததாகவும் கூறிய அவர் இந்நடவடிக்கை அரசியல் நோக்கம் கொண்டதல்ல.மாறாய்,மக்களின் உணர்வுகளையும் அவர்களின் குமுறல்களையும் நேரடியாக கேட்டறிய இஃது பெரும் வாய்ப்பாக விளங்குவதாகவும் கூறினார்.

இந்த இலவச பெட்ரோல் சேவை பெட்டாலிங் ஜெயா SS3 இல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பில்,நிலையற்ற பெட்ரோல் விலையால் மக்கள் குறிப்பாக அடித்தட்டு மக்கள் ஒவ்வொரு நாளும் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் கூறினார்.

 

 

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.