அவசரக் கொள்முதல் இல்லை, மக்கள் தேவைக்கேற்ப செலவு செய்கின்றனர்

30 மார்ச் 2026, 9:16 AM
அவசரக் கொள்முதல் இல்லை, மக்கள் தேவைக்கேற்ப செலவு செய்கின்றனர்

உலு லங்காட், மார்ச் 30: பாலக்கோங் மற்றும் செராஸ் பகுதிகளில் உள்ள நுகர்வோர் மத்தியில் பீதிக் கொள்முதல் எதுவும் கண்டறியப் படவில்லை. மாறாக, மக்கள் பகுத்தறிவுடன் தங்கள் அன்றாடத் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து செலவு செய்வதைக் காண முடிகிறது. இருப்பினும், பொருளாதார நிச்சயமற்ற தன்மையால் பெரும்பாலான நுகர்வோர் தங்கள் செலவினங்-களைக் கட்டுப்படுத்தி, சிக்கனமாகச் செலவு செய்வதாக மீடியா சிலாங்கூர் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

a35537c8d9da34877b596dcdea1c825e.webp

செராஸ் ஜெயா பெங்குலு, அசாருடின் எம்டி அலி கூறுகையில், பொருட்களின் விற்பனை நிலைமை தற்போது சீராகவும் கட்டுப் பாட்டுடனும் உள்ளது என்றார்."சில பொருட்களின் விலையில் அதிகரிப்பு இருந்தாலும், அது பீதிக் கொள்முதலைத் தூண்டும் அளவுக்கு கடுமையாக இல்லை.

இதுவரை, கொள்முதல் கட்டுக்குள் உள்ளது. பெரும்பாலான நுகர்வோர் அன்றாடத் தேவைகளை மட்டுமே வாங்குகின்றனர்," என்று அவர் கூறினார்.

"முட்டை போன்ற சில பொருட்கள் விரைவாக விற்றுத் தீர்ந்து விடுகின்றன, ஆனால் நிலைமை இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளது," என்று அவர் நேற்று தாமான் செராஸ் ஜெயா மசூதி வளாகத்தில் நடைபெற்ற ஜூவலான் எஹ்சான் ரஹ்மா (JER) நிகழ்வில் சந்தித்தபோது கூறினார்.

இதற்கிடையில், பாலக்கோங்கைச் சேர்ந்த கர்மிலா ஜமாடி மற்றும் அவரது கணவர் முகமது அசிசான் ஏ வாஹிட், தங்கள் தேவைகளுக்கு ஏற்ப மிதமான செலவினங்களை மேற் கொள்வதாகக் கூறினார்."நாங்கள் தேவையானதை மட்டுமே வாங்குகிறோம். சமையல் எண்ணெய், முட்டை போன்ற சில பொருட்கள் சில நேரங்களில் குறைவாகக் கிடைத்தாலும், இதுவரை பீதிக் கொள்முதல் ஏற்படவில்லை," என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

பொருளாதார நிலைமை சற்று சவாலாக இருந்தாலும், JER போன்ற முயற்சிகள் அன்றாடச் செலவுகளின் சுமையைக் குறைக்க பெரிதும் உதவுவதாக அவர்கள் தெரிவித்தனர்.அதே சமயம், அகிலா அசாஹா என்பவர், தனது வாங்கும் பழக்கத்தைத் திட்டமிட்டு, தேவைக் கேற்ப மட்டுமே பொருட்களை வாங்குவதாகவும், பொருட்களைச் சேமித்து வைப்பதில்லை என்றும் கூறினார்.

"நான் வாங்குவதற்கு முன் விலைகளை ஒப்பிடுவேன். அரிசி போன்ற சில பொருட்கள் விரைவாக விற்றுத் தீர்ந்து விடுகின்றன, எனவே நாம் வாங்குவதை புத்திசாலித்தனமாகத் திட்டமிட வேண்டும்.""நான் பொருட்களைச் சேமித்து வைப்பதில்லை; தேவைப்படும்போது மட்டுமே வாங்குகிறேன்," என்று அகிலா அசாஹா கூறினார்.

மற்றொரு குடியிருப்பாளரான நூர்லியானா இஸ்மாயில், முன்பு இருந்ததை விட இப்போது அத்தியாவசியப் பொருட்களுக்கு மட்டுமே அதிக கவனம் செலுத்துவதாகக் கூறினார்.

"இப்போது நான் மிகவும் சிக்கனமாக இருக்கிறேன், பொதுவாக மாதத்திற்கு ஒரு முறை பொருட்களை வாங்குகிறேன்."அரிசி, சமையல் எண்ணெய் போன்ற பொருட்கள் சில நேரங்களில் விரைவாக விற்றுத் தீர்ந்து விடும், ஆனால் நான் அதிகமாக வாங்குவதில்லை," என்று கூறிய அவர், மக்களின் வாழ்க்கைச் செலவினங்களைக் குறைக்க உதவும் JER திட்டத்தைப் பாராட்டினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.