கெடாவில் இரு மாவட்டப் பள்ளிகளில் இல்லிருப்பு கற்றல் மற்றும் கற்பித்தல் முறை அமல்

29 மார்ச் 2026, 6:47 AM
கெடாவில் இரு மாவட்டப் பள்ளிகளில் இல்லிருப்பு கற்றல் மற்றும் கற்பித்தல் முறை அமல்

அலோர் ஸ்டார், மார்ச் 29: கோத்தா ஸ்டார் மற்றும் பெண்டாங் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கி செவ்வாய்க்கிழமை வரை மூன்று நாட்களுக்கு இல்லிருப்பு கற்றல் மற்றும் கற்பித்தல் (PdPR) முறை அமல்படுத்தப்படும்.

மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, மார்ச் 26 முதல் 28 வரை தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு இவ்விரு மாவட்டங்களிலும் நிலை 2 வெப்ப அலை பதிவானதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கெடா மாநில கல்வித் துறை (JPN) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"வெப்பமான காலநிலையில் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் தொடர்பான கல்வி அமைச்சின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலனை உறுதி செய்வதற்காக இந்த பி.டி.பி.ஆர். அமல்படுத்தப்படுகிறது," என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

கோத்தா ஸ்டார்
மற்றும் பெண்டாங் மாவட்டக் கல்வி அலுவலகங்களின் மேற்பார்வையில் உள்ள மொத்தம் 206 பள்ளிகளில் இந்த அமலாக்கம் அடங்கும்.

"பி.டி.பி.ஆர். அமலாக்கக் காலத்தில், வானிலை இயல்பு நிலைக்குத் திரும்பினால், தற்போதைய மதிப்பீட்டின் அடிப்படையில் அடுத்த நாள் முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கும்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கெடா மாநில கல்வித் துறை தற்போதைய வானிலை நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணித்து, பள்ளிகளின் செயல்பாடு குறித்த மேல்
தகவல்களை அவ்வப்போது அறிவிக்கும்.

"மாணவர்களின் நலனுக்காக, பி.டி.பி.ஆர். தடையின்றி செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்," என்று அந்த அறிக்கை மேலும் கூறியது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.