ஷா ஆலம், மார்ச் 27: இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள 2026ஆம் ஆண்டுக்கான மலேசிய விளையாட்டுப் போட்டிகளை (சுக்மா) எதிர்கொள்ளும் மாநிலத்தின் ரக்பி மற்றும் வில்வித்தை அணிகளுக்கு சிலாங்கூர் மந்திரி புசார் அறக்கட்டளை (எம்.பி.ஐ) ரிம 200,000 நிதியுதவி வழங்குகிறது.
ஒவ்வொரு அணிக்கும் ரிம 100,000 வழங்கப்படும் என்றும், இந்த நிதி அவர்களின் பயிற்சித் தேவைகளுக்கும் பதக்கங்களை வெல்வதற்கும் பெரிதும் உதவும் என்றும் அதன் தலைவர் அகமட் அஸ்ரி ஜைனல் நோர் கூறினார்.
"இந்த இரண்டு அணிகளுக்கும் நாங்கள் வழக்கம் போல் உதவுவோம். கடந்த ஆண்டும் இந்த அணிகளுக்கு ஆதரவளிக்கும் முயற்சியாக இதே தொகையை நாங்கள் வழங்கினோம்."
"பொதுவாக, இந்த ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் போட்டியில் எம்.பி.ஐ நேரடியாகப் பங்கேற்கும். சிலாங்கூர் அதிக பதக்கங்களை வெல்வதை நாங்கள் உறுதி செய்வோம்," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.
முன்னதாக, சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றத்தின் நிர்வாக இயக்குனர் முகமட் நிஜாம் மர்ஜுகி, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள சுக்மா போட்டிகளில் மாநிலம் சுமார் 80 தங்கப் பதக்கங்களை வெல்ல இலக்கு நிர்ணயித்துள்ளதாகக் கூறியிருந்தார்.
37 வகையான விளையாட்டுகளில் போட்டியிடப்படும் 474 நிகழ்வுகளில் 15 முதல் 20 விழுக்காடு நிகழ்வுகளில் மாநில விளையாட்டு வீரர்கள் வாகை சூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
சரவாக்கில் நடைபெற்ற சுக்மா 2024 போட்டியில், சிலாங்கூர் 181 பதக்கங்களுடன் (56 தங்கம், 64 வெள்ளி மற்றும் 61 வெண்கலம்) முதல் மூன்று இடங்களுக்குள் வரும் இலக்கைத் வெற்றிகரமாக எட்டியது.
22-வது சுக்மா போட்டிகள் 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் 24 வரை நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழா சிப்பாங் அனைத்துலக ஓட்டப் பந்தயத் திடலில் நடைபெறும். பாரா சுக்மா போட்டிகள் 2026 செப்டம்பர் 15 முதல் 20 வரை நடைபெறும்.
பாரா சுக்மாவில் நீச்சல், தடகளம், பூப்பந்து, மேசைப்பந்து, டென்பின் பந்துவீச்சு, புல்வெளி பந்துவீச்சு, வில்வித்தை, சதுரங்கம், போசியா மற்றும் பளுதூக்குதல் ஆகிய 10 விளையாட்டுகள் இடம்பெறும்.
ரக்பி மற்றும் வில்வித்தை அணிகளுக்கு எம்.பி.ஐ ரிம 200,000 நிதியுதவி வழங்குகிறது
27 மார்ச் 2026, 8:07 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
sukankini
சுக்மாவில் சிலாங்கூர் மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விளையாட்டு வீரர்களின் பட்டியல் ஜூன் மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்
Shalini Rajamogun
15 மார்ச் 2026

national
சுக்மா போட்டி 2026: தன்னார்வலர் பதிவுக்கான ஆதரவு சிறப்பாக உள்ளது
Shalini Rajamogun
9 மார்ச் 2026

selangor
சிலாங்கூர் மாநிலக் குழு 2026 சுக்மா போட்டியில் 80 தங்கப் பதக்கங்களை இலக்காகக் கொண்டுள்ளது
Mavitthran
4 பிப்ரவரி 2026

selangor
2026 சுக்மா போட்டியில் சிலாங்கூரின் 1,000-க்கும் விளையாட்டு வீரர்கள் பங்கேற்பு
Evelyn Moses
4 பிப்ரவரி 2026

உங்கள் கருத்து என்ன?




