ஷா ஆலம், மார்ச் 24: சமூக ஊடகங்களில் வைரலான, பெரிய அளவிலான பிளாஸ்டிக் கொள்கலன்களில் RON95 பெட்ரோல் நிரப்பப்பட்ட சம்பவம் குறித்து ஜோகூர் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சு (KPDN) விசாரணையைத் தொடங்கியுள்ளது.
ஸ்கூடாயில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில், ஒரே வாகனம் சம்பந்தப்பட்ட இரண்டு தனித்தனி பரிவர்த்தனைகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டதாக KPDN ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட ஆய்வின்படி, ஒருமுறை வாகனத்தின் எரிபொருள் தொட்டியில் பெட்ரோல் நிரப்பப்பட்டுள்ளது. ஆனால், மற்றொரு முறையில் வாகனத்தின் பின்பகுதியில் (Boot) வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கொள்கலன்களில், மலேசிய விநியோகக் கட்டுப்பாட்டாளர் (Pengawal Bekalan Malaysia) அனுமதித்த அளவை விடக் கூடுதலான பெட்ரோல் நிரப்பப்பட்டுள்ளது."
இதனை உறுதிப்படுத்தும் நோக்கத்திற்காகச், சிசிடிவி மற்றும் பரிவர்த்தனைப் பதிவுகளை ஆய்வு செய்வதும் இந்த விசாரணையில் அடங்கும் என்று KPDN கூறியது.
"இது சம்பந்தமாக, விநியோகக் கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைகள் 1974-இன், துணை விதி 12A-இன் கீழ் ஒரு வழக்கு திறக்கப்பட்டுள்ளது. மேலும், விசாரணைக்கு உதவுவதற்காக வாகனத்தின் உரிமையாளர் கண்டறியப்பட்டு அழைக்கப்படுவார்," என்று தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், தனிநபர்களுக்கு RM1 மில்லியன் வரை அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அதே வேளையில், நிறுவனங்களுக்கு RM2 மில்லியன் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
பொதுமக்கள் 1-800-886-800 என்ற எண்ணின் மூலமாகவோ, 019-848 8000 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாகவோ அல்லது Ez ADU KPDN செயலி மூலமாகவோ KPDN-க்கு தகவல் அல்லது புகார்களை அளிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
பிளாஸ்டிக் கொள்கலன்களில் RON95 பெட்ரோலை நிரப்பியது தொடர்பாக ஜோகூர் KPDN விசாரணை
24 மார்ச் 2026, 10:02 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
ரோன்95 பெட்ரோல் நிரப்பும் தானியங்கி இயந்திரங்களில் வெளிநாட்டு கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படாது
Shalini Rajamogun
31 மார்ச் 2026

national
நாட்டின் எரிபொருள் இருப்பைப் பெட்ரோனாஸ் தொடர்ந்து கண்காணித்து வருகிறது
Shalini Rajamogun
31 மார்ச் 2026

national
இ-ஹெய்லிங் ஓட்டுநர்கள், கிக் ஊழியர்களுக்கான பூடி மடாணி RON95 திட்டத்தின் கீழ் மாதத்திற்கு 800 லிட்டர் உச்சவரம்பு நீட்டிக்கப்படும்
Shalini Rajamogun
27 மார்ச் 2026

national
RON95 பெட்ரோலுக்கான மானியத் தகுதி வரம்பு மாதத்திற்கு 300 லிட்டரிலிருந்து 200 லிட்டராகக் குறைக்கப்படும்
Shalini Rajamogun
27 மார்ச் 2026

உங்கள் கருத்து என்ன?




