பிலிப்பைன்ஸ்: ஹெலிகாப்டர் விபத்தில் ``Farm Fresh Berhad`` பண்ணை நிறுவனத்தின் இயக்குநர் மரணம்

5 மார்ச் 2026, 2:06 AM
பிலிப்பைன்ஸ்: ஹெலிகாப்டர் விபத்தில் ``Farm Fresh Berhad`` பண்ணை நிறுவனத்தின் இயக்குநர் மரணம்

கோலாலம்பூர், மார்ச் 4 – பிலிப்பைன்ஸில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில், மலேசியரான Farm Fresh Berhad பண்ணை நிறுவனத்தின் இயக்குநர் ஜேக்கப் மதன் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் பண்ணை இடத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட இயந்திரக் கோளாறினால் விபத்துக்குள்ளானதாக ``Farm Fresh Bhd`` நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ முகநூலில் வெளியிடப்பட்ட பதிவில் நிர்வாக இயக்குநர் லோய் துவான் ஈ தெரிவித்தார்.

13 ஆண்டுகளுக்கு முன்பு ``Farm Fresh`` குடும்பத்தில் பல்கலைக்கழகப் பயிற்சியாளராக இணைந்த ஜேக்கப், அதன் பின்னர் வலுவான பொறுப்புணர்வையும் கற்றுக்கொள்ளும் சிறந்த திறனையும் வெளிப்படுத்தினார். 35 வயதான அவர் நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தார்.

அவரின் மரணம் தனிப்பட்ட முறையிலும் நிறுவனத்திற்கும் பெரிய இழப்பாக இருப்பதாகவும், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதாகவும் லோய் துவான் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.