கோலாலம்பூர், பிப் 27 - மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்கள் விரைவில் குணமடைய தாம் பிராத்திப்பதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
"மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்கள் நீடித்த ஆரோக்கியத்துடனும், எல்லாம் வல்ல இறைவனின் பாதுகாப்பிலும், அருளிலும், கருணையிலும் எப்போதும் இருக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்," என அவர் தமது முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார்.
இஸ்தானா நெகாராவின் அறிக்கைப்படி, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்கள் தசை மற்றும் எலும்பு தொடர்பான (musculoskeletal) வலியால், குறிப்பாக முதுகு மற்றும் இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட உபாதையால் நலக்குறைவாக உள்ளார்.
சிகிச்சை மற்றும் குணமடைதல் செயல்முறைக்கு வழிவகுக்கும் வகையில், மாமன்னர் ஓய்வெடுக்குமாறும், எந்தவொரு நிகழ்விலும் கலந்துகொள்ள வேண்டாம் என்றும் மருத்துவ நிபுணர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இஸ்தானா நெகாரா தகவல் வெளியிட்டது.
-- பெர்னாமா
மாமன்னர் விரைவில் குணமடைய பிரதமர் அன்வார் பிரார்த்தனை
27 பிப்ரவரி 2026, 7:47 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
படிவம் ஆறு: இடைநிலைக் கல்விக்குப் பிந்தைய கல்வி, பல்கலைக்கழக நுழைவுக்கான தயாரிப்பு - பிரதமர் அன்வார்
Evelyn Moses
2 மார்ச் 2026

national
கடும் வெயில்: மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மாமன்னர் அறிவுறுத்தல்
Shalini Rajamogun
26 மார்ச் 2026

national
219-ஆவது காவல்துறை தினத்தை முன்னிட்டு மாட்சிமை தங்கிய பேரரசர் வாழ்த்து
Shalini Rajamogun
25 மார்ச் 2026

national
மாமன்னருக்கு உடல்நலக் குறைவு – இஸ்தானா நெகாரா தகவல்
Shalini Rajamogun
27 பிப்ரவரி 2026

உங்கள் கருத்து என்ன?




