ஷா ஆலாம், நவ 14- திறமையான மற்றும் போட்டித் தன்மை கொண்ட சுகாதார முன்வரிசை ஊழியர்களை உருவாக்குவதற்காக, சிலாங்கூர் முன்வரிசை பயிற்சியாளர் திட்டம் (Selangor Frontliner Apprenticeship - SELFA) என்ற புதிய திட்டத்தை மாநில அரசாங்கம் RM4.74 மில்லியன் ஒதுக்கீட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது என்று மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தார்.
இந்தத் திட்டம், சுகாதாரத் துறையில் உள்ள முக்கியமான படிப்புகளைப் பயில மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கிறது.இதில், சிலாங்கூர் பல்கலைக்கழகத்தில் (Unisel) மூன்று ஆண்டு காலப் படிப்புகளான டிப்ளோமா செவிலியம் (Nursing), பிசியோதெரபி (Physiotherapy), மருத்துவ படிமம் (Medical Imaging) மற்றும் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம் (Medical Laboratory Technology) ஆகியவை அடங்கும்.
மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் பட்டம் பெறும் மாணவர்களுக்கு செல் கேட் மருத்துவமனை (Selgate Hospital) வலையமைப்பில் ஐந்து ஆண்டுகளுக்குப் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும்.
இதற்கிடையில், சிலாங்கூர் தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டு மையம் (Selangor Technical Skills Development Centre - STDC), வாகனத் துறை நிறுவனங்களுடன் இணைந்து சர்வதேச தரத்திலான வாகனத் துறை கல்வி வசதிகளை உருவாக்க உள்ளது என்று அமிருடின் ஷாரி கூறினார்.
சிலாங்கூர் சுகாதார முன்வரிசை ஊழியர்களுக்காக SELFA பயிற்சித் திட்டம்: RM4.74 மில்லியன் ஒதுக்கீடு
14 நவம்பர் 2025, 10:05 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
மருத்துவமனைப் பள்ளித் திட்டம் விரிவாக்கம், 400,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்தனர்
Shalini Rajamogun
24 மார்ச் 2026

selangor
'பத்தாங் காலி கேர்' சமூக நலத் திட்டம் இந்த ஆண்டும் தொடரும்
Shalini Rajamogun
10 மார்ச் 2026

national
பணிச்சுமை காரணமாக அமைச்சர் ஸ்டீவன் சிம் மருத்துவமனையில் அனுமதி
Shalini Rajamogun
20 பிப்ரவரி 2026

selangor
தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் மருத்துவமனையின் பாதுகாப்பு & வசதி மேம்படுத்தப்பட்டது
Shalini Rajamogun
6 ஜனவரி 2026

உங்கள் கருத்து என்ன?





