கோத்தா பாரு, செப். 26- ஜாலான் கோல கிராய்-கோத்தா பாரு, கம்போங் பத்து பாலாயில் இன்று அதிகாலை ஓட்டுநர் உட்பட 15 பேருடன் பயணித்த விரைவுப் பேருந்து கவிழ்ந்தது.
இந்த விபத்து தொடர்பில் பொதுமக்களிடமிருந்து அதிகாலை 5.30 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக கிளந்தான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பேச்சாளர் கூறினார்.
உடனடியாக புறப்பட்ட சுங்கை டுரியான் மற்றும் கோல கிராய் தீயணைப்பு நிலையத்தின் உறுப்பினர்கள் குழு அதிகாலை 5.54 மணிக்கு சம்பவ இடத்தை அடைந்தது.
சம்பவ இடத்தில், நாசா எக்ஸ்பிரஸ் விரைவு பேருந்து விபத்துக்குள்ளானதை தீயணைப்பு வீரர்கள் கண்டனர். அதில் ஓட்டுநர் உட்பட மொத்தம் 15 பேர் இருந்தனர். அவர்களில் இரண்டு பேர் இடிபாடுகளில் சிக்கியிருந்தனர் என்று அவர் இன்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது கூறினார்.
15 பேருடன் பயணித்த விரைவு பேருந்து கவிழ்ந்தது- இருவர் இடிபாடுகளில் சிக்கினர்
26 செப்டெம்பர் 2025, 1:47 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
பிளஸ் நெடுஞ்சாலையில் கோர விபத்து: லாரி ஓட்டுநர் பலி
Evelyn Moses
5 பிப்ரவரி 2026

national
பேருந்து - லாரி மோதிய விபத்து: சிகிச்சை பலனின்றி ஒருவர் பலி
Evelyn Moses
12 ஜனவரி 2026

selangor
பள்ளி பேருந்து மற்றும் உயர் கல்வி கட்டண உதவி திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் விரைவில் திறக்கப்படும்
Shalini Rajamogun
20 ஜனவரி 2026

antarabangsa
சவூதி அரேபியாவில் பேருந்து டீசல் லாரியுடம் மோதி விபத்து - குறைந்தது 42 இந்தியப் பிரஜைகள் மரணம்
Shalini Rajamogun
18 நவம்பர் 2025

உங்கள் கருத்து என்ன?




