ஷா ஆலம், டிச 4- இ-பசார் 11.11 எனும் இயங்கலை வாயிலான விற்பனை பெருவிழாவின் வழி மூன்று கோடி வெள்ளி அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக முதலீட்டுத் துறைகளை ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்ட
வணிகர்கள் மீண்டும் புத்துயிர் பெறுவதற்கு இத்திட்டம் துணை புரிவதாக அவர் சொன்னார்.
இயங்கலை வாயிலான வர்த்தகம் துரித வளர்ச்சி கண்டு வரும் துறையாக விளங்கு
வதோடு அதிக வருமானத்தையும் ஈட்டித் தருகிறது. ஆகவே, வணிகர்கள் இத்துறையில் ஈடுபட முனைப்பு காட்ட வேண்டும் என்றார் அவர்.
பொருளாதார மீட்சியை விரைவு படுத்துவதில் இலக்கவியல் முக்கிய பங்கை ஆற்றும்
என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால் அத்துறையில் வணிகர்கள் அதிகளவில் ஈடுபடுவதை அரசு ஊக்குவிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
நேற்று இயங்கலை வாயிலாக நடைபெற்ற 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த இணைய
வர்த்தக விருதளிப்பு நிகழ்வில் அவர் இதனைக் கூறினர்.
இயங்கலை வாயிலாக லஸாடா மற்றும் ஷோப்பி ஆகிய நிறுவனங்களில் செய்யப்பட்ட வர்த்தக உபரி மதிப்பு 70 கோடி வெள்ளியை எட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ECONOMY
இயங்கலை விற்பனை பிரசார இயக்கத்தின் வாயிலாக மூன்று கோடி வெள்ளி வர்த்தகம்- டத்தோ தெங் தகவல்
4 டிசம்பர் 2020, 5:31 AM
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

selangor
46 இடங்களில் நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பியது
n.pakiya
7 அக்டோபர் 2020

national
ரிங்கிட் வலுவடைந்தது நாட்டின் பொருளாதார மீதான நம்பிக்கையின் அறிகுறி
Shalini Rajamogun
13 பிப்ரவரி 2026

video
PM: Pelaburan Kerajaan Madani mesti beri pulangan kepada rakyat
Kathiravan Manoharan
24 டிசம்பர் 2025

உங்கள் கருத்து என்ன?




