KLIA விமான நிலையத்தில் Cuscus விலங்குகள் கடத்தல் முறியடிப்பு

6 மார்ச் 2026, 8:13 AM
KLIA விமான நிலையத்தில் Cuscus விலங்குகள் கடத்தல் முறியடிப்பு

கோலாலம்பூர், மார்ச் 6: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (கேஎல்ஐஏ) முனையம் 1-இல், இரண்டு கஸ்கஸ் (Cuscus) ரக வனவிலங்குகளைக் கடத்த முயன்ற 68 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவரது பயணப் பெட்டியை சோதனையிட்டபோது, இரண்டு சிறிய பிளாஸ்டிக் பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த விலங்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. பப்புவா நியூ கினியாவின் பூர்வீகக் காடுகளில் இருந்து இந்த விலங்குகள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது என்று வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறை (பெர்ஹிலிட்டான்) தலைமை இயக்குநர் டத்தோ அப்துல் காதிர் அபு ஹாஷிம் தெரிவித்தார்.

 விசாரணையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அந்த ஆடவர் ஒரு மலேசியக் குடிமகன் என்பது தெரியவந்துள்ளது. அவர் இந்தியாவிலுள்ள திருச்சிராப்பள்ளிக்குச் செல்லும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு பிடிபட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.