MYsaveFood திட்டத்தின் கீழ் 301.4 கிலோகிராம் உணவு மற்றும் பானங்கள் வெற்றிகரமாக சேகரிக்கப்பட்டன

5 மார்ச் 2026, 2:55 AM
MYsaveFood திட்டத்தின் கீழ் 301.4 கிலோகிராம் உணவு மற்றும் பானங்கள் வெற்றிகரமாக சேகரிக்கப்பட்டன

ஷா ஆலம், மார்ச் 4: அம்பாங் ஜெயா நகராண்மை கழகத்தின் (எம்பிஏஜே) நகர்ப்புற சேவைகள் மற்றும் சுகாதாரத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட MYsaveFood திட்டத்தின் கீழ், ஐந்து ரமலான் பஜார்களில் 301.4 கிலோகிராம் உணவு மற்றும் பானங்கள் வெற்றிகரமாக சேகரிக்கப்பட்டன.

அதில் பண்டார் பாரு அம்பாங் ரமலான் பஜாரில் அதிகபட்சமாக 171.4 கிலோகிராம் உணவு மற்றும் பானங்கள் சேகரிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து பாடாங் எம்பிஏஜே (53 கிலோ), பண்டான் இண்டா (47 கிலோ), தாமான் ஸ்ரீ பாயு (30 கிலோ) மற்றும் தாமான் மெலாவத்தி ஆகியவை இடம்பெற்றன என்று அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் தெரிவித்தது.

“இந்தத் திட்டம் கழிவுகளைக் குறைக்க உதவியுள்ளதோடு ரமலான் மாதம் முழுவதும் உணவு வீணாவதைக் குறைப்பதற்கான தொடர்ச்சியான முயற்சியாகப், பிப்ரவரி 23 முதல் மார்ச் 11 வரை தினமும் மாலை 5 மணிக்கு MYsaveFood திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.”

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.