வணிக வளாகத்தில் நடந்த வெட்டுச் சம்பவம்: விசாரணைக்கு உதவ இருவர் கைது

2 மார்ச் 2026, 4:20 AM
வணிக வளாகத்தில் நடந்த வெட்டுச் சம்பவம்: விசாரணைக்கு உதவ இருவர் கைது

ஜார்ஜ் டவுன், மார்ச் 2: கடந்த புதன்கிழமை ஜாலான் கெலாவாயில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஆடவர் ஒருவர் தாக்கப்பட்டுக் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக, விசாரணைக்கு உதவும் வகையில் இரண்டு இளைஞர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர். 20 வயது மதிக்கத்தக்க அந்த இருவர் இன்று கைது செய்யப்பட்டதாகவும், இது குறித்த மேல் விசாரணை நடைபெற்று வருவதாகவும் பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிஸி இஸ்மாயில் தெரிவித்தார். இந்த வழக்கில் இதுவரை மொத்தம் ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், போலீசார் தற்போது விரிவான விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 இந்தச் சம்பவம் குறித்து குற்றவியல் சட்டத்தின் 326-வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக, 29 முதல் 40 வயதுக்குட்பட்ட நான்கு சந்தேக நபர்களைப் போலீசார் கைது செய்து, அவர்களை நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். கடந்த புதன்கிழமை, குறிப்பிட்ட வணிக வளாகத்தில் மர்ம நபரால் கடுமையாகத் தாக்கப்பட்ட ஆடவர் ஒருவர் பலத்த காயமடைந்தார்; தாக்குதலை நடத்திய நபர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.