மாமன்னருக்கு உடல்நலக் குறைவு – இஸ்தானா நெகாரா தகவல்

27 பிப்ரவரி 2026, 7:33 AM
மாமன்னருக்கு உடல்நலக் குறைவு – இஸ்தானா நெகாரா தகவல்

கோலாலம்பூர், பிப். 27 – மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்கள் தசை மற்றும் எலும்பு தொடர்பான (musculoskeletal) வலியால், குறிப்பாக முதுகு மற்றும் இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவர்கள் மாமன்னர் முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளதாக இஸ்தானா நெகாரா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மன்னர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதால், பிரதமர், அமைச்சர்கள், வெளிநாட்டு தூதர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் திட்டமிடப்பட்ட இஃப்தார் நோன்புத் திறப்பு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ளவில்லை.

அதேவேளை, யூபிஎன்எம் (UPNM) சுல்தான் இப்ராஹிம் பள்ளிவாசல் திறப்பு விழாவும் மற்றொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மாமன்னரின் உடல்நிலை மேம்பட்டதும் அவர் மீண்டும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என இஸ்தானா நெகாரா தெரிவித்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.