இன்று மீண்டும் கிளானா ஜெயா எல்.ஆர்.டி. ரயில் சேவையில் தொழில்நுட்பக் கோளாறு

27 பிப்ரவரி 2026, 3:31 AM
இன்று மீண்டும் கிளானா ஜெயா எல்.ஆர்.டி. ரயில் சேவையில் தொழில்நுட்பக் கோளாறு

கோலாலம்பூர், பிப். 27 – இன்று மீண்டும் கிளானா ஜெயா வழித்தட எல்.ஆர்.டி. ரயில் சேவையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக இன்று, கிளானா ஜெயா எல்.ஆர்.டி. நிலையத்தில் ரயில் ஒன்று சேவையிலிருந்து நிறுத்தப்பட்டதாக ரெப்பிட் கேஎல் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த சூழ்நிலை ரெப்பிட் கேஎல் ரயில் சேவைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதுடன், சேவை அட்டவணை தேவைக்கேற்ப சரிசெய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்காக ரெப்பிட் கேஎல் நிறுவனம் தனது வருத்தத்தையும் தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை, கிளானா ஜெயா வழித்தட சேவையில் அவசர பிரேக் மற்றும் ரயில் கட்டுப்பாட்டு சாதன அமைப்புகளில் ஏற்பட்ட தொடர்ச்சியான தொழில்நுட்ப சிக்கல்களால் சேவை பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.