நெடுஞ்சாலை சுங்கக் கட்டண உயர்வை அமைச்சரவை முடிவு செய்யும்

25 பிப்ரவரி 2026, 8:13 AM
நெடுஞ்சாலை சுங்கக் கட்டண உயர்வை அமைச்சரவை முடிவு செய்யும்

கோலாலம்பூர், பிப் 25 - நெடுஞ்சாலை சுங்கக் கட்டண உயர்வை அரசாங்கம் எந்த காலக்கட்டம் வரை ஒத்திவைக்கும் என்பது குறித்த எந்தவொரு முடிவையும் அமைச்சரவை எடுக்க வேண்டும் என பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.

ஏனென்றால், அவ்விவகாரம் நிதி தாக்கங்களையும் ஒட்டுமொத்த அரசாங்க கொள்கையையும் உள்ளடக்கி இருப்பதாக அவர் தெரிவித்தார்.

மக்களின் சுமையைக் குறைக்க, தற்போதுள்ள சுங்கக் கட்டணங்கள் அதிகரிக்கப்படாமல் இருப்பதை உறுதிச் செய்யும் நோக்கத்துடன், அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக, அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

மலேசிய கட்டுமானத் தொழில் மேம்பாட்டு வாரியம், CIDB-இல் நடைபெற்ற CAP30 எனப்படும் 2026-2030-ஆம் ஆண்டு வரையிலான கட்டுமான செயல் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பின்னர், அவர் செய்தியாளர்களிடம் இதனை கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.