ஈப்போ, பிப் 25 - தைப்பிங்கில் புயல் மற்றும் மரம் முறிந்து விழுந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று இரவு 92ஆக இருந்த நிலையில், இன்று காலை 30ஆகக் குறைந்துள்ளது.
பாதிக்கப்பட்ட 22 குடும்பங்களைச் சேர்ந்த அனைவரும் லாரூட், மாத்தாங், செலாமா மாவட்டத்தில் உள்ள தாமான் காயா பல்நோக்கு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண மையத்தில் (PPS) தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாநிலப் பேரிடர் மேலாண்மை செயலகம் தெரிவித்துள்ளது.
"பாதிக்கப்பட்ட அனைவரும் தாமான் டாமாய், தாமான் ரியா, தாமான் காயா, தாமான் டேசா செமர்லாங் மற்றும் பத்து 2 ½ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள்," என்று அந்த செயலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், லாரூட், மாத்தாங், செலாமா, மஞ்சோங், பேராக் தெங்கா, ஈலிர் பேராக், கோல கங்சார், கிந்தா, கம்பார், பாடாங் மற்றும் முவாலிம் உள்ளிட்ட பேராக் மாநிலத்தின் பல மாவட்டங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) கணித்துள்ளது.
-- பெர்னாமா
தைப்பிங்கில் புயலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்தது
25 பிப்ரவரி 2026, 3:13 AM
தொடர்புடைய செய்திகள்
national
பேரா அவுலோங் ஶ்ரீ மகா சிவாலயத்தின் மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது
Mavitthran
8 டிசம்பர் 2025

national
3 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
Shalini Rajamogun
21 ஜனவரி 2026

national
பேரா மாநிலத்தில அரசாங்க நிலங்களில் கட்டப்பட்டுள்ள மேலும் இரு ஆலய நில விவகாரங்களுக்கு தீர்வு பிறந்தது- டத்தோ அ. சிவநேசன் தகவல்
Mavitthran
20 ஜனவரி 2026

national
இன்று பிற்பகல் 1 மணி வரை 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
Shalini Rajamogun
20 ஜனவரி 2026





