இந்தியா, பிப் 25 - நேற்றிரவு கிழக்கு இந்தியாவில், ஒரு சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில் இரு பணியாளர்கள் உட்பட ஏழு பேர் பலியாகினர். இந்த விபத்து ஜார்க்கண்ட் மாநிலத்தின் சத்ரா மாவட்டத்தில் உள்ள சிமாரியா பகுதிக்கு அருகே நிகழ்ந்துள்ளது.
அந்த மருத்துவ மாற்று சேவை மெடேவாக் விமானம் ஜார்க்கண்டின் ராஞ்சி விமான நிலையத்திலிருந்து இரவு 7.11 மணியளவில் டெல்லி நோக்கி புறப்பட்டதாக இந்திய விமானப் போக்குவரத்து இயக்கம் (DGCA) கூறியது.
வானிலை காரணமாக, அந்த விமானம் கொல்கத்தா விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டைத் தொடர்பு கொண்டு தனது பயணப் பாதையை மாற்ற அனுமதி கோரியது.
பின்னர், இரவு 7.34 மணி அளவில், அந்த விமானத்தின் தொடர்பும், ராடார் கண்காணிப்பும் சுமார் 100 கடல்மைல் தொலைவில் வாரணாசி நகருக்கு தென்கிழக்கே துண்டிக்கப்பட்டதாக DGCA தெரிவித்தது.
Beechcraft C90 வகை அந்த விமானம், டெல்லியை தளமாகக் கொண்ட விமான மருத்துவ சேவை மற்றும் Redbird Airways நிறுவனம் மூலம் இயக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அசம்பாவிதத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை என்று மாவட்ட மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பெர்னாமா








