கோலாலம்பூர், பிப் 24 - மலேசிய ஒளிபரப்புத் துறையின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கும் 40 வயதான அஷ்வாட் இஸ்மாயிலுக்குத் தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் வாழ்த்துகளைத் தெரித்துள்ளார்.
மேலும், வியூக ஒளிபரப்பு பிரிவின் துணை தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் ஷரிஃபா அட்லினா ஷேட் அப்துல்லாவுக்கும் அவர் தமது வாழ்த்தினை தெரிவித்திருக்கிறார்.
அவர்களின் தலைமைத்துவம் நாட்டின் ஒளிபரப்புத் துறையை வலுப்படுத்தி புதுமைகளை ஊக்குவிக்கும் என்று ஃபஹ்மி நம்பிக்கை தெரிவித்தார்.
மலேசிய ஒளிபரப்புத் துறையில் சுமார் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் பிப்ரவரி 22-ஆம் தேதி ஓய்வு பெற்ற டத்தோ சுஹாய்மி சுலைமானுக்குப் பதிலாக, அஷ்வாட் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஷ்வாட் முன்னதாக ஆஸ்ட்ரோ அவானியில் சுமார் 19 ஆண்டுகளாகப் பணியாற்றி அனுபவம் பெற்றவர் ஆவார்.
பெர்னாமா








