வியட்நாம், பிப் 23 - முக்கிய ஏற்றுமதி கட்டுப்பாட்டு பட்டியலியிருந்து உடனடியாக வியட்நாமை நீக்குமாறு சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு உத்தரவிடுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை வாஷிங்டனில், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோ லாம் உடனான சந்திப்பின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
வியட்நாம்-அமெரிக்கா உடனான விரிவான வியூக கூட்டமைப்பானது, நிலையான, கணிசமான மற்றும் பயனுள்ள முறையில் வளர்ச்சி பெறுவதற்கான ஹனோய் அளிக்கும் முக்கியத்துவத்தை காட்டுவதாக அறிக்கை ஒன்றில் தோ லாம் தெரிவித்திருந்தார்.
இரு நாடுகளும் வட்டாரங்களுக்கான பரிமாற்றங்களையும், உயர் மட்ட தொடர்புகளையும் அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்திருந்தார்.
மேலும், இருதரப்பு வர்த்தகத்தை சமநிலைப்படுத்த வியட்நாம் மேற்கொண்ட முயற்சிகளை டிரம்ப் பாராட்டியதுடன், பயணத்தின் போது கையெழுத்திடப்பட்ட மதிப்புமிக்க ஒப்பந்தங்களையும் வரவேற்றார்.
பெர்னாமா







