மலாக்கா, பிப் 23: காஜா பேராங், ஜாலான் ஓங் கிம் வீ சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஆடவர் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
மலாக்கா தெங்ஙா மாவட்டக் காவல்துறைத் தலைவர், ஏசிபி கிறிஸ்டோபர் பாதிட் கூறுகையில், வாகனத்தில் ஒருவர் சுயநினைவின்றி இருப்பதாக நேற்று பிற்பகல் 3.10 மணியளவில் பொதுமக்களிடமிருந்து தங்களுக்கு அழைப்பு வந்ததாகக் கூறினார்.
"இதையடுத்து, தெங்ஙரா காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர், தடயவியல் நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு வந்த தெங்ஙரா சுகாதார கிளினிக்கின் மருத்துவ அதிகாரி, 50 வயதான அந்த ஆடவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினார்."
"மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய, சடலம் உடற்கூறு ஆய்வுக்காக மலாக்கா மருத்துவமனையின் தடயவியல் துறைக்குக் கொண்டு செல்லப்பட்டது," என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.






