சிலாங்கூரின் எதிர்கால வெற்றியின் முக்கியத் தூணாக யூனிசெல் தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும்

23 பிப்ரவரி 2026, 3:04 AM
சிலாங்கூரின் எதிர்கால வெற்றியின் முக்கியத் தூணாக யூனிசெல் தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும்

கோல சிலாங்கூர், பிப். 23 — தரமான, போட்டித்திறன் மிக்க மனித மூலதனத்தை உருவாக்குவதன் மூலம் சிலாங்கூரின் எதிர்கால வெற்றியின் முக்கியத் தூணாக யுனிவர்சிட்டி சிலாங்கூர் (யூனிசெல்) தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும்.

உயர்கல்வி நிறுவனங்கள் மாநிலத்தின் மூலோபாய சொத்துகளாகும்; அவை திறமைகளை உருவாக்கி, சிலாங்கூரின் நீண்டகால வளர்ச்சி திசையை நிர்ணயிக்கின்றன என்று மந்திரி புசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

உயர்கல்வித் துறை திறமையான பணியாளர்களை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாகவும், தேசிய முன்னேற்றத்தை ஆதரிக்கும் அறிவுசார் சூழலின் முக்கியத் தூணாகவும் செயல்படுகிறது.

“எனவே, அறிவு, உயர்தரம் மற்றும் நெறிமுறைகளை உடைய மனித மூலதனத்தை உருவாக்குவதன் மூலம் யூனிசெல் மாநிலத்தின் எதிர்கால வெற்றிக்கான முக்கிய அம்சமாக அதிகாரமளிக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட வேண்டும்,” என்றார்.

நேற்று இங்குள்ள யூனிசெல்லின் பெஸ்தாரி ஜெயா கிளையில் நடைபெற்ற ‘Majlis Iftar Perdana’ நிகழ்ச்சியில் உரையாற்றியபோது இதனை அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

அதே நிகழ்வில், மாணவர்களுக்கு University Fee Basic Assistance (BAYU) உதவியையும், 2026 ஆம் ஆண்டிற்கான மாணவர் பிரதிநிதி கவுன்சில் உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்களையும் வழங்கினார்.

மாநிலத்திற்கு சொந்தமான பல்கலைக்கழகமாக, ஆராய்ச்சி, புதுமை மற்றும் செயற்பாட்டு சமூக ஈடுபாட்டின் மூலம் சிலாங்கூரின் வளர்ச்சி திட்டத்தை முன்னேற்றுவதில் யூனிசெல் மேலும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், தொழில் துறை மற்றும் சமூகத்திற்கிடையேயான மூலோபாய கூட்டாண்மை வலுப்படுத்தப்பட வேண்டும்; இதன் மூலம் பட்டதாரிகள் தற்போதைய தேவைகளையும் எதிர்கால சவால்களையும் எதிர்கொள்ள முழுமையாகத் தயாராக இருப்பதை உறுதி செய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.