புதுடெல்லி, பிப் 20 - இந்தியாவில் 1,500 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான உள்கட்டமைப்பு முதலீட்டின் ஒரு பகுதியாக, விசாகப்பட்டினத்தில் முழுமையான செயற்கை நுண்ணறிவு மையத்தை நிறுவ கூகள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைமை செயல்முறை அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.
"நேற்று அறிவிக்கப்பட்ட அமெரிக்கா-இந்தியா இணைப்பு முயற்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் நான்கு புதிய அமைப்புகள் உட்பட, கடலுக்கு அடியில் உள்ள இழை ஒளியியல் கேபிள்களின் பரந்த வலையமைப்பையும் நாங்கள் உருவாக்கி வருகிறோம்," என்றார் அவர்.
புதுடெல்லியில் நடைபெற்ற இந்தியா AI தாக்க உச்சநிலை மாநாட்டில் உரையாற்றிய போது சுந்தர் பிச்சை இதனைப் பகிர்ந்து கொண்டார்.
தமது இளமைக் காலத்தில் கடலோர நகரமான விசாகப்பட்டினம் வழியாகச் சென்றபோது, அது மிகுந்த திறன் வாய்ப்புகளால் நிரம்பிய நகரமாக தோன்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெர்னாமா








