கோல குபு பாருவில் டிரைவ்-த்ரூ மறுசுழற்சி மையம் செயல்பாட்டுக்கு வந்தது

30 ஜனவரி 2026, 8:22 AM
கோல குபு பாருவில் டிரைவ்-த்ரூ மறுசுழற்சி மையம் செயல்பாட்டுக்கு வந்தது
கோல குபு பாருவில் டிரைவ்-த்ரூ மறுசுழற்சி மையம் செயல்பாட்டுக்கு வந்தது
கோல குபு பாருவில் டிரைவ்-த்ரூ மறுசுழற்சி மையம் செயல்பாட்டுக்கு வந்தது

ஷா ஆலம், ஜன 30: நேற்று கோல குபு பாரு, கம்போங் அசாம் கும்பாங்கில் தானியங்கி டிரைவ்-த்ரூ மறுசுழற்சி மையம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டு இப்போது முழுமையாகச் செயல்பட்டு வருகிறது.

உள்ளூர் சமூகத்தினரிடையே மறுசுழற்சி நடைமுறைகளை ஊக்குவிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியான இத்திட்டத்தை கோலா குபு பாரு மாநில சட்டமன்ற உறுப்பினர் (ADN) பாங் சோக் தாவ் நேற்று அதிகாரப்பூர்வமாத் தொடக்கி வைத்தார்.

இந்த திட்டம் கழிவுகளைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், குடியிருப்பாளர்கள் கூடுதல் வருமானத்தை ஈட்டுவதற்கான வாய்ப்புகளையும் திறக்கிறது என்றார் பாங் சோக் தாவ்.

"தானியங்கி மறுசுழற்சி மையம் குடியிருப்பாளர்கள் தொடர்ந்து மறுசுழற்சி செய்வதற்கான வசதியை வழங்குகிறது. அதே நேரத்தில் சுற்றுச்சூழலைப் பராமரிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வையும் வளர்க்கிறது," என்று அவர் தனது உரையின் போது கூறினார்.

அதே விழாவில், தானியங்கி மறுசுழற்சி இயந்திரம் மற்றும் Trash4Cash செயலியின் பயன்பாடு குறித்த விளக்கமும் வழங்கப்பட்டது.

இதற்கிடையில், உலு சிலாங்கூர் நகராண்மை கழகம், இந்த முயற்சி நீண்ட காலத்திற்குச் சமூக ஒத்துழைப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையின் அடிப்படையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அறிவித்தது.

"மேலும் நிலையான நகர்ப்புற வளர்ச்சியை நோக்கிய ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த திட்டத்தை மேலும் பல பகுதிகளுக்கு விரிவுபடுத்த முடியும் என்று உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் நம்புகிறது" என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.