கோலாலம்பூரை I LITE U: 70 எல்யிடி LED விளக்குகள் நாளை முதல் அலங்கரிக்கும்

2 ஜனவரி 2026, 8:45 AM
கோலாலம்பூரை I LITE U: 70 எல்யிடி LED விளக்குகள் நாளை முதல் அலங்கரிக்கும்

கோலாலம்பூர், ஜனவரி 2 — மலேசிய வருகை ஆண்டின் (TMM2026) தொடக்க நிகழ்வான ''I LITE U'' விழாவுடன் இணைந்து சனிக்கிழமை இரவு மொத்தம் 70 ஒளி உமிழும் எல்யிடி (LED) விளக்குகள் புக்கிட் பிந்தாங் பகுதியை ஒளிரச் செய்யவுள்ளது.

குறைந்த கார்பன் நகர நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நவீன மற்றும் நிலையான விளக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த விழா நகரத்தின் அழகை மேம்படுத்தும் என்று வீட்டுவசதி மற்றும் உள்ளூர் அரசாங்க அமைச்சகத்தின் துணைப் பொதுச் செயலாளர் முகமட் ஹஸ்லி அகமது கூறினார்.

சுமார் ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள இந்த திட்டத்தில், தொங்கும் விளக்குகள், நில விளக்குகள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் விசித்திர கரு வடிவமைப்புகளை அடிப்படையாகக் கொண்ட LED விளக்குகள் மிளிரும் என்று அவர் கூறினார்.

"I LITE U என்பது உள்கட்டமைப்பு, விளக்குகள், புதுமை, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல்-நிலைத்தன்மை மற்றும் நகரமயமாக்கல் என்பதன் சுருக்கமாகும், இது மிகவும் துடிப்பான மற்றும் கவர்ச்சிகரமான நகர இரவு சூழ்நிலையை உருவாக்கும்," என்று அவர் கூறினார்.

மேலும் I LITE U திட்டம் நாளை மாலை 7.30 மணிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களால் தொடங்கி வைக்கப்படும். இந்த திட்டத்தின் செயல்பாட்டில் TMM2026 வாயிலில் விளக்குகள் மற்றும் நவீன மற்றும் பாரம்பரிய வடிவமைப்புகளின் கலவையுடன் கூடிய சிற்பம் ஆகியவை அடங்கும். கூடுதலாக உள்ளூர் கலைஞர்களின் ஒளிரும் அணிவகுப்பு மற்றும் நிகழ்ச்சிகளால் இது மெருகூட்டப்படுகிறது.

ஜாலான் புக்கிட் பிந்தாங் மற்றும் ஜாலான் சுல்தான் இஸ்மாயில் பங்கேற்கும் "I LITE U" விழாவிற்கான சாலை மூடல்கள் ஜனவரி 1 ஆம் தேதி மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையிலும், ஜனவரி 3 ஆம் தேதி மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும் இருக்கும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.