கோலாலம்பூர், ஜனவரி 2: நாடு முழுவதும் நடத்தப்பட்ட 'OPS AMBANG TAHUN BAHARU 2026' நடவடிக்கையின் மூலம் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக 12,437 சம்மன்களை காவல்துறை வழங்கியுள்ளது.
1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் (APJ) கீழ் 390 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 25 பேர் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமாட் யுஸ்ரி ஹசன் பஸ்ரி கூறினார். மேலும், 1952ஆம் ஆண்டு அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் 20 பேரும், தண்டனைச் சட்டத்தின் கீழ் மூவரும், பிற சட்டங்களின் கீழ் மூவரும் கைது செய்யப்பட்டனர்," என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையில் 327 உயர் அதிகாரிகளும் 2,460 காவல்துறை அதிகாரிகளும் பல வெளி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் ஈடுபட்டதாக அவர் கூறினார். இதில் சாலைப் போக்குவரத்துத் துறை, தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு முகமை, சுற்றுச்சூழல் துறை, மலேசிய குடிவரவுத் துறை, நெடுஞ்சாலை சலுகை நிறுவனங்கள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகள் ஆகியவை அடங்கும்," என்று அவர் குறிப்பிட்டார்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் சீரான ஓட்டத்தை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் 240 இடங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக முகமாட் யுஸ்ரி தெரிவித்தார்.





