கோத்தா பாரு, ஆக. 27 - தானா மேரா, கம்போங் சாட் ஆற்றில் கடந்த திங்கட்கிழமை விழுந்த தனது மகனை வெற்றிகரமாக மீட்ட பிறகு நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று நம்பபடும் ஆடவர் ஒருவர் இன்று காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
நாற்பந்தாறு வயதான சைஃபுல்டின் ரம்லி @ கசாலியின் உடல் இன்று காலை சுமார் 7.00 மணியளவில் மீட்புக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டதாக தானா மேரா மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் முகமட் ஹக்கி ஹஸ்புல்லா கூறினார்.
ஆற்றில் விழுந்த இடத்திலிருந்து சுமார் 700 மீட்டர் தொலைவில் பாதிக்கப்பட்டவரின் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக தானா மேரா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று இன்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
இம்மாதம் 25 ஆம் தேதி தனது நான்கு பிள்ளைகளுடன் சைஃபுல்டின் நடைப்பயணம் சென்றதாகக் கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் தானா மேரா, ஜாலான் கம்போங் சாட்டில் உள்ள தங்களின் வீட்டிற்கு அருகிலுள்ள ஆற்றில் தவறி விழுந்துள்ளார்.
தனது 11 வயது மகனை அவர் வெற்றிகரமாக காப்பாற்றியுள்ளார். எனினும் ஆற்றின் வலுவான நீரோட்டத்தில் அவர் அடித்துச் செல்லப்பட்டார்.
ஆற்றில் விழுந்த மகனைக் காப்பாற்றும் போது நேர்ந்த துயரம் - தந்தை நீரில் மூழ்கி மரணம்
27 ஆகஸ்ட் 2025, 8:02 AM
தொடர்புடைய செய்திகள்
national
நாட்டில் 27 ஆறுகள் மாசுபட்ட நிலையில் இருக்கின்றன
Shalini Rajamogun
22 ஆகஸ்ட் 2025

antarabangsa
இந்தோனேசியாவில் பள்ளிப் பேருந்து விபத்து; 16 பேர் உயிரிழப்பு
Mavitthran
22 டிசம்பர் 2025

selangor
கழிவறைக்குள் பெண்ணைப் படமெடுத்த வேலையில்லா ஆடவருக்கு நான்காயிரம் ரிங்கிட் அபராதம் விதிப்பு
Mavitthran
4 டிசம்பர் 2025

selangor
சிலாங்கூரில் போலிசாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆடவர் உயிரிழந்தார்- டெங்கிலில் பரபரப்பு
Mavitthran
25 நவம்பர் 2025

உங்கள் கருத்து என்ன?




