ALAM SEKITAR & CUACA

ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் பூனையின் எலும்புக்கூடுகள் - வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவர் கைது

26 மார்ச் 2023, 8:24 AM
ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் பூனையின் எலும்புக்கூடுகள் - வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவர் கைது

கோலாலம்பூர், மார்ச் 26- ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான பூனைகளின் எலும்புக்கூடுகள் மற்றும் சிதைந்த உடல்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பில் அந்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்த நபர் கைது செய்யப்பட்டார்.

செராஸ், பண்டார் ஸ்ரீ பெர்மைசூரியிலுள்ள அந்த ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த 31 சந்தேகப்பேர்வழியை செராஸ் பகுதியில் தாங்கள் நேற்றிரவு கைது செய்ததாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஸாம் ஹலிம் ஜமாலுடின் கூறினார்.

கைதான அந்நபர் இம்மாதம் 28ஆம் தேதி வரை விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அந்த ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பை அதன் உரிமையாளர் சோதனையிட்ட போது பூனைகளுடையவை என நம்பப்படும் ஏராளமான எலும்புகள் மற்றும் துண்டுகளாக நறுக்கப்பட்ட உடல் பாகங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அந்த குடியிருப்பில் துர்நாற்றம் வீசுவது தொடர்பில் அண்டை வீட்டாரிடமிருந்து கிடைத்த புகாரின் பேரில் அச்சோதனையை மேற்கொண்ட அதன் உரிமையாளர் பின்னர் இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.