கோலாலம்பூர், ஜன 23 - மக்களின் வாழ்வுச் செலவு பிரச்சனையை சமாளிக்கும் மடாணி அரசின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, மடாணி ரஹ்மா விற்பனைத் திட்டம் கடந்த ஜனவரி 9 முதல் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டம் 222 நாடாளுமன்றத் தொகுதிகள், 600 மாநில சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் கூட்டாட்சி பிரதேசங்களில் உள்ள 40 மண்டலங்களை உள்ளடக்கியதாகும் என உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்வுச் செலவு அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமட் அலி தெரிவித்தார்.
“மடாணி ரஹ்மா விற்பனைத் திட்டம் தொடர்பான தேதி மற்றும் இடங்கள் குறித்த கூடுதல் தகவல்களைப் பெற விரும்பும் பொதுமக்கள், உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்வுச் செலவு அமைச்சகத்தின் (KPDN) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அவ்வப்போது புதுப்பிக்கப்படும் கால அட்டவணையை https://www.kpdn.gov.my/en/jualan-rahmah நாடலாம்,” என அவர் முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.
நேற்று அவர் புத்திராஜெயாவில் உள்ள உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்வுச் செலவு அமைச்சக (KPDN) வளாகத்தில் மாதந்தோறும் நடத்தப்படும் மடாணி ரஹ்மா விற்பனையின் செயல்பாட்டை நேரில் பார்வையிட்டதாகவும், இத்திட்டம் அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


