ஷா ஆலம், ஜன 22 - ஷா ஆலம் செக்ஷன் 3 பகுதியில் உள்ள ஒரு தனியார் குழந்தை பராமரிப்பு மையத்தில் ஆட்டிசமால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவனை தவறான முறையில் பராமரித்ததாகக் கூறப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று புகார்களைக் காவல்துறை பெற்றுள்ளது.
ஆட்டிசமால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவனை தவறான முறையில் பராமரித்ததாகக் கூறப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று புகார்களை காவல்துறை பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக அச்சிறுவனின் பெற்றோரிடமிருந்தும் புகார் பெறப்பட்டுள்ளது என ஷா ஆலம் மாவட்டக் காவல்துறை தலைவர், உதவி ஆணையர் ரம்சே எம்போல் தெரிவித்தார். இந்த வழக்கு 2001ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டப் பிரிவு 31(1) கீழ் விசாரிக்கப்படுகிறது.
இந்த வழக்கு 2001ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டப் பிரிவு 31(1) கீழ் விசாரிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட மழலையர் பள்ளி சில சிசிடிவி காணொளிகளை மட்டுமே வழங்கியுள்ள நிலையில் அதிகாரிகள் முழு காணொளிகளை கைப்பற்ற திட்டமிட்டுள்ளனர்.
சிலாங்கூர் சமூக நலத்துறை (JKM) அக்குழந்தை பராமரிப்பு மையத்திற்கு சென்று ஆய்வு செய்ததில், அது 1984ஆம் ஆண்டு குழந்தைகள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டதல்ல என்று கண்டறியப்பட்டது.
கூடுதலாக, இடத்தின் நிலைமை பாதுகாப்பற்றது, செயல்பாட்டுக்கு உகந்ததல்லாதது என்பதால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. பெண்கள் மற்றும் இது முதல் சம்பவம் அல்ல, கடந்த ஆண்டு இதே வகை புகார்கள் வந்ததாகக் குடும்ப மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் அன்பால் சாரி கூறினார்.


