பந்திங், ஜன 22 - மீண்டும் பள்ளிக்குத் திரும்புவோம் 2026, திட்டத்திற்கான விண்ணப்பத்தைப் பந்திங் தொகுதியின் சமூக சேவை மையம் திறந்துள்ளது.
புதிய பள்ளி அமர்விற்கு மாணவர்களும் பெற்றொர்களும் தயாராக உதவும் வகையில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது என பந்திங் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மனிதவள மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு வீரமான் தெரிவித்தார்.
இந்த திட்டத்திற்கான பதிவு எதிர்வரும் ஜனவரி 26 தொடங்கி, நிர்ணயிக்கப்பட்ட இடங்கள் முழுவதும் பூர்த்தி ஆகும் வரை நடைபெறும் என முகநூலில் அறிவிக்கப்பட்டது. அனைவரும் முன்பே பதிவு செய்து, தங்கள் இடத்தை உறுதிசெய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த திட்டத்திற்கான விண்ணப் படிவங்களைப் பந்திங் தொகுதியின் சமூக சேவை மையத்தில் பெற்று கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு, பொதுமக்கள் 03-31811083 அல்லது 019-3125096 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


