ஜோர்ஜ்டவுன், ஜன 22 - பிப்ரவரி 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தைப்பூசக் கொண்டாட்டங்களின் போது, நெரிசலைக் குறைப்பதற்கும் பொதுப் போக்குவரத்தை அதிக அளவில் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும் பினாங்கில் இலவச ஃபெரி சேவை வழங்கப்படும்.
இந்த இலவச சேவை ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி அதிகாலை 3 மணி வரை நீட்டிக்கப்பட்ட நேரங்களுடன் செயல்படும் என பினாங்கு துறைமுக ஆணையத்தின் (PPC) தலைவர் டத்தோ யோ சூன் ஹின் கூறினார்.
“தைப்பூசக் காலத்தில் பக்தர்களுக்கு உதவும் வகையில் பங்கலான் சுல்தான் அப்துல் ஹலீம் மற்றும் பங்கலான் ராஜா துன் உடா முனையங்களில் இருந்து இலவச ஃபெரி சேவை இயக்கப்படும்” என அவர் குறிப்பிட்டார்.
அதிகமான பக்தர்கள் பினாங்கிற்கு வருகை புரிவார்கள் என்பதனால், இந்த இலவச சேவையின் மூலம் போக்குவரத்து நெரிசலை குறைத்து, எளிதான பயணத்தை உறுதிச் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டது.


