ஷா ஆலம், ஜன 22 - 2008ஆம் ஆண்டு பிறந்த தாபோங் வாரிசான் அனாக் சிலாங்கூர் (தாவாஸ்) உறுப்பினர்கள், ஜனவரி 22 முதல் RM1,500 கோர தொடங்கலாம்.
விண்ணப்ப செயல்முறையை நெறிப்படுத்த, துணை ஆவணங்களை நிரப்புவதன் மூலம் இணையம் வழி உரிமைகோரல்களைச் செய்யலாம் என யாவாஸ் அறிவித்துள்ளது.
உறுப்பினர்கள் பிறந்த மாதத்தின் அடிப்படையில், tawas.yawas.com.my என்ற வலைத்தளம் அல்லது யாவாஸ் செயலி வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என அந்த அறக்கட்டளை முகநூலில் அறிவித்துள்ளது.
பருவங்கள் மற்றும் காலக்கெடுக்கள்:
பருவம் 1: ஜனவரி – மார்ச் மாதங்களில் பிறந்தவர்கள்
கோரிக்கை செய்யும் காலம்: 22 ஜனவரி – 14 மார்ச்
பணம் வழங்கப்படும் காலம்: 15 மார்ச் – 31 மார்ச்
பருவம் 2: ஏப்ரல் – ஜூன் மாதங்களில் பிறந்தவர்கள்
கோரிக்கை செய்யும் காலம்: ஏப்ரல் – 14 ஜூன்
பணம் வழங்கப்படும் காலம்: 15 ஜூன் – 30 ஜூன்
பருவம் 3: ஜூலை – செப்டம்பர் மாதங்களில் பிறந்தவர்கள்
கோரிக்கை செய்யும் காலம்: ஜூலை – 14 செப்டம்பர்
பணம் வழங்கப்படும் காலம்: 15 செப்டம்பர் – 30 செப்டம்பர்
பருவம் 4: அக்டோபர் – டிசம்பர் மாதங்களில் பிறந்தவர்கள்
கோரிக்கை செய்யும் காலம்: அக்டோபர் – 14 டிசம்பர்
பணம் வழங்கப்படும் காலம்: 15 டிசம்பர் – 31 டிசம்பர்
உறுப்பினர்கள் தங்கள் பருவத்தில் கோரிக்கை செய்யவில்லை என்றால், அடுத்த பருவத்தில் கூட கோரிக்கை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.



