ஷா ஆலம், ஜன 21: அடுத்த ஆண்டு முதல் ஆறு வயது மாணவர்களின் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு ஆசிரியர்கள், பள்ளிகள் மற்றும் தற்போதுள்ள வசதிகள் போதுமானதாக இருப்பதாக கல்வி அமைச்சகம் உறுதியளித்துள்ளது.
கல்வி அமைச்சகம் ஓர் ஆய்வை நடத்தியதாகவும், அடையாளம் காணப்பட்ட பள்ளிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த போதுமான ஆசிரியர்கள் இருப்பதைக் கண்டறிந்ததாகவும் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை விருப்பத்தேர்வு மற்றும் பெற்றோருக்குக் கட்டாயமில்லை என அவர் கூறினார். கூடுதல் மாணவர்களை ஏற்றுக்கொள்ள பொருத்தமான வசதிகள், உள்கட்டமைப்பு மற்றும் ஆதரவு உள்ள பள்ளிகளில் மட்டுமே இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
“குறைந்த கட்டுமான காலத்துடன் அதிக மாணவர்கள் சிக்கலை சமாளிக்க தொழில்மயமாக்கப்பட்ட கட்டிட அமைப்பை (IBS) பயன்படுத்தி புதிய வகுப்பறைகளைக் கட்டத் திட்டமிடுவதோடு, தயாராக இருக்கும் பள்ளிகளையும் கல்வி அமைச்சு அடையாளம் கண்டுள்ளது.
"கல்வி அமைச்சகம் IBS கட்டுமானத்தை செயல்படுத்துவதில் அனுபவம் வாய்ந்தது. நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட அதிக மாணவர்கள் கொண்ட பள்ளிகளில் இந்த முறை மூலம் அப்பிரச்சனை வெற்றிகரமாக தீர்க்கப்பட்டுள்ளது," என அவர் கூறினார்.
இன்று கெடா மாநில கல்வித் துறையில் (JPN) நடைபெற்ற பாலர் பள்ளி PAKAT திட்டத்திற்குப் பிறகு அவர் இதனை தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட பள்ளிகளில் தேவைகளுக்கு ஏற்ப ஆசிரியர்களின் எண்ணிக்கை இருக்கிறதா என்பதனை அறிந்து கொள்ள கல்வி அமைச்சகம் ஒரு தரவு மற்றும் பகுப்பாய்வு முறையைப் பயன்படுத்தும் என்றார் பட்லினா சிடெக்.


