ஷா ஆலம், ஜன 21: ஷா ஆலம், செக்சன் 14 பகுதியில் அமைந்துள்ள அனேக்கா வாக் (Aneka Walk), நவீன சமூக மையக் கருத்தை முன்வைத்து, நகரத்தின் புதிய ஈர்ப்பாக விளங்கும். இது பிப்ரவரியில் செயல்பாட்டுக்கு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வதற்கான இறுதிப் பணிகள் மற்றும் முன் ஏற்பாடுகள் நடந்து வருவதாக உள்கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹாசிம் முகநூல் பதிவில் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகத்தின் (PKNS) முதலீடு மூலம் SA செண்ட்ரல் மத்திய வளர்ச்சியின் ஒரு பகுதியாக அனேக்கா வாக் உள்ளது. இது பி.கே.என்.எஸ் வளாகம் மற்றும் SACC மால் இடையேயான பாதசாரி நடைபாதையை புதுப்பிக்கும்,” என அவர் கூறினார்.
விளக்குகள் மற்றும் இசையுடன் கூடிய அனேகா வாக், முக்கிய வளாகத்தை இணைக்கும் ஒரு மூடப்பட்ட நடைபாதையாக மாறும். இது பொழுதுபோக்கு, கலாச்சார விழாக்கள், ஷோப்பிங் மற்றும் உணவு ஆகியவற்றின் கூறுகளைக் கொண்டு வரும்.
KRU என்டர்டெயின்மென்ட் நிர்வகிக்கும் இந்த திட்டம் வணிக வாய்ப்புகளையும் உள்ளூர் தொழில்முனைவோருக்கான பொருளாதாரத்தையும் மேம்படுத்தும்.



