இலவசக் கல்வி மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும்

21 ஜனவரி 2026, 6:37 AM
இலவசக் கல்வி மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும்

ஷா ஆலம், ஜன 21 - மேற்படிப்பைத் தொடரும் மாற்றுத்திறனாளிகளுக்கு (OKU) இலவச கல்வி வழங்குவது, நீண்ட காலத்திற்கு அவர்களின் வேலை வாய்ப்பு திறனையும், வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தும் என சிலாங்கூர் மாற்றுத் திறனாளிகள் செயல் மன்றம் (MTOS) தெரிவித்துள்ளது.

இந்த முன்முயற்சி சமூக கொள்கைகளை வலுப்படுத்துவதிலும், மாற்றுத்திறனாளிகள் உள்ளடக்கிய உயர்கல்வியைப் பெறுவதை உறுதி செய்வதிலும் முற்போக்கான மற்றும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கையாகும் என அதன் தலைவர் டேனியல் அல்-ரஷீட் கூறினார்.

“கல்வி என்பது மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்தும் ஒரு முக்கிய அடித்தளம் ஆகும். இது முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டியது அவசியம்; அதற்காக கூடுதல் ஆதரவு வழங்கப்பட வேண்டும். இதில் வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக் ஏற்ற கல்வி பொருட்கள், கல்வி ஆதரவு மற்றும் மாணவர் நலன் ஆகியவை அடங்கும்.

“இந்நடவடிக்கை நாட்டின் உள்ளடக்க கல்வி சூழலில் மாற்றத்திற்கான ஒரு மையப்புள்ளியாக அமைகிறது. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் திறன்களைப் பாதுகாப்பதில் MTOS ஒரு மூலோபாய பங்காளியாக இருக்க தயாராக உள்ளது,” என அவர் அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் சிலாங்கூர் அரசு உறுதியாக உள்ளது. மாற்றுத்திறனாளிகள் கொள்கைக்கு இணங்க கல்வி நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் பல தரப்பினர் உடன் ஒருங்கிணைந்து பல்வேறு கொள்கைகள், திட்டங்கள் மற்றும் நெருக்கமான கூட்டாண்மைகளை ஏற்பாடு செய்துள்ளது.

“இந்தக் கொள்கையின் நன்மைகள் இலக்கு குழுவினருக்கு உண்மையில் செல்வதை உறுதி செய்வதில் கூட்டுச் செயல்முறை மற்றும் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறை முக்கியம்,” என்று டேனியல் தெரிவித்தார்.

நேற்று, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அரசு உயர்கல்வி நிறுவனங்கள் (IPTA), பாலிடெக்னிக் மற்றும் கம்யூனிட்டி கல்லூரிகளில் சுமார் 3,000 மாற்றுத்திறனாளி மாணவர்கள் இலவச கல்வியைப் பெறுவார்கள் என அறிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.