ஷா ஆலம், ஜன 19: கெடா, கூலிமில் உள்ள ஜாலான் சுங்கை கோப்பில் பெரோடுவா விவா மற்றும் புரோட்டான் S70 கார்கள் மோதிய விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தனது துறைக்கு மாலை 5.09 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகக் கூலிம் ஹைடெக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவரும், மூத்த உதவி தீயணைப்புத் தலைவருமான அஸ்மிர் ஹாசன் தெரிவித்தார்.
“பெரோடுவா விவாவின் ஓட்டுநர் காரில் சிக்கிக் கொண்ட நிலையில் காரில் இருந்த இரண்டு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
“பாதிக்கப்பட்ட மூவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மலேசிய சுகாதார அமைச்சகத்தின் மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்,” என்று அஸ்மிர் ஹாசான் கூறினார்.
புரோட்டான் S70 தீப்பிடித்ததாகவும், ஓட்டுநர், சிறு காயங்களுக்கு மட்டும் ஆளாகி, கூலிம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.
இரண்டு குழந்தைகளின் உடல்களையும் பொதுமக்கள் மீட்டனர். அதே நேரத்தில் பெரோடுவா விவாவின் ஓட்டுநர் சடலம் ,சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி தீயணைப்பு வீரர்களால் அகற்றப்பட்டது.
இதற்கிடையில் கூலிம் தன்னார்வ தீயணைப்புத் துறையின் உதவியால் தீயை அணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


